Newskadai.com
லைஃப் ஸ்டைல்

திருப்பதி உண்டியல் நிரம்பிட்டா… பக்தர்களுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா..!!?

Share this:

திருப்பதி என்றாலே அணைவரும் அறிந்த விஷயம் ஒன்று லட்டு. லட்டு போன்று இன்னொரு மிகிமையும் உண்டு. அது என்னெவென்றால் திருப்பதியில் பிரமிக்க வைக்கும் வகையில் இருப்பது உண்டியல். “காவாளம்” என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலை வைப்பது வழக்கம். திருப்பதியில் இந்த உண்டியல் நிரம்புவது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் ஆகும்.

Tirupatiஇந்த நிலையில் ஒருவர் ஏழுமலையானை தரிசித்த பிறகு உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும் நேரத்தில் உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்து கொண்டால் அதற்கு மேல் காணிக்கை செலுத்த அனுமதிக்க மாட்டார்கள்.

உடனே உண்டியலுக்கு சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்துவார்கள். அதே வேளையால் அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அந்த இரு பக்தர்களும் உண்டியல் நிரம்பியதற்கு சாட்சி கையெழுத்து போடவேண்டும் என்ற சம்பிரதாயம் அந்த காலத்தில் இருந்தே பின்பற்றப்படுகிறது.

கையெழுத்து போடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு அந்நாள் ஒரு  அற்புதமான நாளாக அமையும் என்பதே உண்மை. அந்த இரு பக்தர்களையும் மீண்டும் ஒரு முறை ஏழுமலையானை தரிசிக்க அழைத்துச் செல்வார்கள். அதுமட்டுமின்றி மிகவும் அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைப்பார்கள். இந்த தரிசனத்தின் போது அவர்களை எவரும் அவசரப்படுத்தமாட்டார்கள் மனம் குளிர ஏழுமலையானை பிரார்த்தனை செய்யலாம். இப்பாக்கியம் யாருக்கெல்லாம் குடுத்து வைத்துள்ளதோ.


Share this:

Related posts

எதையும் சாதிக்க முடியும்…பேச்சில் நிதானத்தை கடைபிடிங்க.. இந்த ராசியை சேர்ந்தவர்களே…!!

THAVAMANI NATARAJAN

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

அப்பாவிடம் பணத்தை ‘அபகரிக்க’ திட்டம்… 13 வயது மகன் போட்ட பகீர் ‘ஸ்கெட்ச்’… திடுக்கிட வைக்கும் தகவல்கள்…!

THAVAMANI NATARAJAN

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

கார்டு இருந்தா போதும் கவலை வேண்டாம் : வீடு தேடி வந்து வசூல் செய்யும் மின்சார வாரியம்…

MANIMARAN M