Newskadai.com
தமிழ்நாடு

“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…!

Share this:

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த ஐந்து மாதங்களாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகள், கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர்த்த மற்ற தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து வருகின்றன. அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று தமிழக மாணவர்கள் பல்வேறு ஊர்களில் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் காட்டுமன்னார்குடி அருகே குருங்குடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் நிஷாந்த் “பத்தாவதில் என்னை பாஸ் போட்ட வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி” என்றும், “என்னை பார்த்து ஏளனமாகச் சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்” என்றும் மிகவும் குறும்புத்தனமாக வடிவமைத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, “மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே” என்று கோவை நகரில் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு வடிவமைத்து ஒட்டியுள்ளது. தேர்வுகளை ரத்து செய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை நகரில் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை  காண்போருக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

MANIMARAN M

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

NEWSKADAI

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

AMARA