Newskadai.com
இந்தியா

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வில் அனுமதி இல்லை – மத்திய அரசு…

Share this:

2020-ம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) வரும் செப்.13-ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடைபெறும் நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

  • நீட் தேர்வு அனுமதிச் சீட்டுடன் சுய அறிவிப்புப் படிவம்.
  • புகைப்படம்,
  • செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டை.
  • 50 மில்லி அளவில் சானிடைசர்.
  • உட்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்.
  • முகக்கவசம்.
  • கையுறை. 
  • மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ்.
  • மாணவர்கள் குறைவான உயரம் கொண்ட காலணிகளை அணியலாம்.

  • ஷூ உள்ளிட்ட மூடப்பட்ட காலணிகளுக்கு அனுமதி இல்லை.
  • குறைவான அரைக்கை மற்றும் முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி இல்லை.
  • மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிந்திருக்கும் தேர்வர்கள், கட்டாயம் சோதனை செய்யப்படுவர். இதற்காக அவர்கள் முன்னதாகவே தேர்வு அறைக்கு வரவேண்டியது அவசியம்.
  • தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்குப் புதிதாக முகக்கவசம் வழங்கப்படும்.
  • ஏற்கெனவே மாணவர்கள் அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு, தேர்வு அறையில் அளிக்கப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம்.
  • மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் உடல்வெப்ப சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

  • மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
  • மாணவர்களுக்கு இடையே 6 அடி தூர இடைவெளி இருக்க வேண்டும்.
  • தேர்வு முடிந்த பின் மாணவர்கள் ஒவ்வொருவராக மட்டுமே வெளியேற வேண்டும்.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது

என்று அந்த அறிவிப்பில் மத்திய அரசு கூறியுள்ளது.


Share this:

Related posts

கோமாவில் பிரணாப் முகர்ஜி… எந்த முன்னேற்றமும் இல்லை என கைவிரித்த ராணுவ மருத்துவமனை…!!

THAVAMANI NATARAJAN

சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்… 8 பேர் பலி… அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

“விவசாயிகளுக்கான கறுப்பு சட்டம்”… வேளாண் மசோதா குறித்து மோடியை விளாசிய ராகுல் காந்தி…!!

MANIMARAN M

கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு. சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

NEWSKADAI

சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்ட “தேச விரோத பல்கலைக்கழகம்”…

MANIMARAN M

அயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…!!

AMARA