Newskadai.com
தமிழ்நாடு

எட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…!!

Share this:

ஈரோடு மாவட்டம் அந்தியூர், அழகிய மலை கிராமங்கள் நிறைந்த ஊர். அங்கு உள்ள மலைக் கிராமங்களில் வாழும் குழந்தைகள் தான் இப்பொழுது கூலித் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர்.

மேலும் படிக்க:http://“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

நீடித்துக் கொண்டே போகும் கொரோனா (COVID-19) பொது முடக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கையை முடக்கிப் போட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயக் கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர். தோட்டவேலை, கரும்பு வெட்டுதல், ஆடுமாடு மேய்த்தல், சுமை தூக்குதல், போன்ற வேலைகளைச் செய்யும் சிறுவர்களுக்கு தினக்கூலியாக வேலைக்கு தகுந்தார்போல் 200 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க:http://தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் சிறுவர்களும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். கூலிவேலை செய்து காசு பார்க்க ஆரம்பித்துவிட்ட சிறுவர்கள் தொலைக்காட்சி வழி கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை. சிக்னல் கிடைக்காத, ஆண்ட்ராய்டு போன் இல்லாத, இது போன்ற மலை கிராமங்களில் ஆன்லைன் கல்வி என்பது எட்டாக்கனி.

கூலி வேலைக்கு பழகி கையில் காசு பார்த்த பின்பு இந்த சிறுவர்களின் மனம் மீண்டும் பள்ளிக்கூட படிப்பில் ஈடுபடுமா என்பது சந்தேகமே. பழங்குடியின குழந்தைகள் கற்கும் சூழலுக்கு திரும்ப அரசு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Share this:

Related posts

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்… அதிரடி அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

MANIMARAN M

விநாயகர் ஊர்வலம்… தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதா…? உயர் நீதிமன்றம் கேள்வி..

MANIMARAN M

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

நாளை புரட்டாசி அமாவாசை… மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

THAVAMANI NATARAJAN