Newskadai.com
தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

Share this:

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் இருந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கொரோனா காலத்தில் கல்வி நிலையங்களை திறப்பது குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைவதில்லை, அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சென்றடைவதில்லை என்பதால் ஆசிரியர்கள் பலரும் கிராமங்களுக்கு சென்று வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.

இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் புரியாததாலும், செல்போன் இல்லை என்ற காரணத்திலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தில் நடந்துள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி துபாயில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிரபித்ததை தொடர்ந்து தனது சொந்த ஊருக்கு திரும்பி தற்போது ஆட்டோ ஓட்டிவருகிறார். இவரது மூத்த மகள் சுபிக்ஷா மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

Suicide
Suicide

தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருவதால் ஆரம்பத்தில் உற்சாகமாக படிக்கத் தொடங்கினார் சுபிக்ஷா.  தொடர்ந்து 2 மாதங்களாக பாடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் காலம் நேரம் பாராமல் படிப்பிற்காக மட்டுமே நேரத்தை செலவழித்து வந்துள்ளளார். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அனைவரும் தூங்கிய பின் வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் சுபிக்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கழிவறைக்கு சென்ற பெண் வெகுநேரம் ஆகியும் வராததால் பெற்றோர் சந்தேகத்துடன் சென்று பார்த்தபோது தூக்கில் சடலமாகத் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

கடந்த 2017 ம் ஆண்டு எம்ஜிஆர்  நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவி சுபிக்ஷா அவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கையால் சான்றிதழ் பெற்றுள்ளார். நன்றாகப் படிக்கும் மாணவியான சுபிக்ஷா தற்கொலை செய்து கொண்டது வருத்தத்தை அளிக்கிறது.  மாணவர்கள் தங்கள் பிரச்சனைகளை பெற்றோரிடம் மனம் திறந்து கூறுவதன் மூலம் மன அழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து சிறிது விடுபட முடியும். குழந்தைகளின் மன அழுத்தத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். தற்கொலை ஒன்றே தீர்வாகாது என்பதை மாணவர்களுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரியவைக்க வேண்டும்.


Share this:

Related posts

மேட்டூர் சுற்றுச்சுவர் விபத்து: பலியான பெண் குடும்பத்திற்கு இழப்பீடு…!

MANIMARAN M

இ-பாஸ் பெறுவதை எளிமையாக்க குழுக்கள் அமைப்பு… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி உத்தரவு…!!

POONKUZHALI

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

AMARA

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M