Newskadai.com
தமிழ்நாடு

தொடரும் நீட் தேர்வு மரணங்கள்: கைக்கு வராத ஹால்டிக்கெட்… மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!!

Share this:

மத்திய அரசு நேற்று செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த துவங்கியுள்ளது. வரும் 13ஆம் தேதி நீட் தேர்வும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம், பொது போக்குவரத்து முடக்கம், பள்ளி கல்லூரிகள் மூடல் போன்ற பல கட்ட நடவடிக்கைகளில் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். எனவே இதற்கு பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் களபம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி ஹரிஷ்மா. இவர் நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்து தேர்விற்கு தயாராகி வந்திருக்கிறார். கடந்த வாரத்தில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை வெளியிட்டது. இதில் மாணவி ஹரிஷ்மாவிற்கு ஹால் டிக்கெட் வராததால் மன உளைச்சலுக்கு உள்ளானர். இதனைத் தொடர்ந்து இவர் நேற்று முன்தினம் விஷம் அருந்தியிருக்கிறார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அவரை உடனடியாக புதுக்கோட்டை அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…!!

NEWSKADAI

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI

திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… தாலி, மெட்டியை கழட்டி கணவனிடம் கொடுக்க வைத்த அதிகாரிகள்…!

THAVAMANI NATARAJAN

மாவட்டந்தோறும் அதிரடி… நாகை மக்களுக்காக முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்…!!

MANIMARAN M

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

MANIMARAN M