Newskadai.com
தமிழ்நாடு

தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு… இன்று சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங்…!!

Share this:

தமிழகத்தில் மொத்தம் 461 பொறியியல் கல்லூரிகள் உள்ளது இதில் 1 லட்சத்து 63 ஆயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொறியியல் படிப்பிற்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளர், இதில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் மட்டும் கலந்தாய்விற்கு தகுதியானவர்கள் என தரவரிசைபட்டியல் கடந்த 28ம் தேதி அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டது. இந்நிலையில்  மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 8 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 8 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், கணினி வசதி இல்லாதாவர்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள  உதவி மையங்களில் கலந்தாய்வில் பங்கேற்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிய நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும் என தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு http://www.tneaonline.org என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.


Share this:

Related posts

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

NEWSKADAI

விலை கொடுத்து தண்ணீரை வாங்கும்போதே… நோயையும் சேர்த்து வாங்குறோம்..!! மக்களே உஷார்…!!

NEWSKADAI

கொரோனாவிடமிருந்து வயதானவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் வேறு வழியில்லை…!!

NEWSKADAI

கைவிட்ட தனியார் மருத்துவமனை, கொரோனா கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை…

MANIMARAN M

தமிழக மக்களே தயார்: நாளை முதல் வீடு தேடி வருகிறது அரசின் அசத்தல் டோக்கன்…!

THAVAMANI NATARAJAN

பட்டையைக் கிளப்ப போகும் வீரலட்சுமி… 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான முதல் பெண் ஓட்டுநர்…!!

MANIMARAN M