Newskadai.com
அரசியல்

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை….

sellur raju
Share this:

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனாம்குளாத்தூர் ஊராட்சியில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஓட்டிய பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் நுழைவு வாயிலில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு அந்த பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் சிலர் காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் அவமதிப்பு செய்துள்ளனர்.

தகவலறிந்து வந்த மணிகண்டம் காவல்துறையினர் காவி சாயத்தை சுத்தப்படுத்தி, செருப்பு மாலையை அகற்றினர். இந்த தகவலைக் கேள்விப்பட்டு, தி.க., கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சியினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதுரை கள்ளந்திரி பகுதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது, “தலைவர்களின் சிலைகளை பாதுகாப்பதில் அரசு முனைப்போடு செயல்பட்டு வருவதாகவும், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நியாய விலை கடைகள் தொடங்கப்படும் என்றும் கூறினார்.


Share this:

Related posts

ப.சிதம்பரம் பொண்டாட்டி வீட்டு முன்னாடி போய் போராடுங்க… ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா….!!

AMARA

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

AMARA

எல்லை மீறும் ஆளுநர்…!!! கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறார்… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு..!!!

MANIMARAN M

மறைந்தது வசந்தம்… சொந்த ஊர் நோக்கி புறப்பட்டது வசந்தகுமார் உடல்…!!

NEWSKADAI

பாஜகவினருக்கு அடுத்த அதிர்ச்சி… கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா… மகளையும் விட்டு வைக்காத சோகம்…!!

AMARA

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA