Newskadai.com
தேர்டு ஐ

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

Share this:

யானைகளின் தந்தத்திற்காக அவற்றைக் கொல்லும் மனிதர்களும் யானைகளை வாழவிடாமல் அழிவின் விளிம்பிற்கு தள்ளும் மனிதர்களும் ஒன்றுதான். நம்மில் பலர் நமக்கு தெரியாமலேயே யானைகளின் அழிவிற்கு காரணமாகி போகிறோம். நாம் கார்களில் சொகுசாக பயணப்பட வேண்டும் என்பதற்காக போடப்படும் நெடுஞ்சாலைகளும் யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மேலும் படிக்க:http://வாழைத்தார்களை உருட்டி விளையாடும் இந்த குட்டியின் சேட்டை அழகோ அழகு தான்…!! வீடியோ

தமிழகத்தில் மட்டும் கடந்த எட்டு மாதங்களில் 17 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. மனிதர்களின் பணத்தாசையே வனவிலங்குகளின் அழிவிற்கு முக்கிய காரணம். கனிம வளங்களுக்காக காடுகளையும் மலைகளையும் நாம் அழிப்பதால் யானையின் வாழிடங்கள் குறைந்துவிட்டன. புதிது புதிதாக போடப்படும் நெடுஞ்சாலைகள், நகர விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக யானையின் வழித்தடங்களும் மறைந்து விட்டன. மனிதன் ஆக்கிரமித்தது போக மீதமுள்ள வனத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை.

மனிதர்களால் உருவாக்கப்படும் சமூக காடுகள் யானைகளுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதில்லை. உணவும் நீரும் தேடி அவை ஊருக்குள் வருகின்றன. மனித தேவைக்காக பயிரிடப்பட்ட பயிர்களை காப்பாற்ற போடப்பட்ட மின்சார வேலிகளும் காட்டுப்பன்றியைக் கொள்ள மனிதனால் வைக்கப்பட்ட விஷம் தோய்ந்த உணவும் யானைகளைக் கொல்கின்றன. யானைகள் வாழ காடும் மலையும் வேண்டும். காடும் மலையும் மழை கொடுக்கும். மனிதன் உயிர்வாழ மழை நீர் அவசியம். எனவே யானைக்காக இல்லாவிடினும் நமக்காக வேணும் காடுகளையும் மலைகளையும் பாதுகாப்போம்.


Share this:

Related posts

இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : ஆரண்யகங்கள் – அ.கா.ஈஸ்வரன்

NEWSKADAI

மின்னலால் இனி மரணமில்லை… இந்திய விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்பம்…!

NEWSKADAI

சிறுகதை : காளியான பெருமாள் – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது… ஆனால் முகேஷ் அம்பானி??

MANIMARAN M

“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

NEWSKADAI

மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

POONKUZHALI