Newskadai.com
தமிழ்நாடு

சினிமா பாணியில் சிலை கடத்தல்… இணைய பேரத்தில் சிக்கிய கொள்ளை கும்பல்…

Share this:

மயிலாடுதுறை அருகில் உள்ள அனந்தமங்கலம் ராஜ கோபாலசாமி கோயிலில் இருந்த ஐம்பொன்களிலான ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் சிலைகள் 1978-ல் திருடுபோயின. இது குறித்து அப்பொழுது வழக்கு தொடரப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சிலைகள் எதுவும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் லண்டனில் உள்ள கலைப்பொருட்கள் விற்பனை முகவர்கள் சங்க இணையத்தளத்தில் இந்த சிலைகள் ஒன்றின் படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த தனியார் கலைபொருள் முகவர் ஒருவர் இந்த சிலையை விற்பனைக்காக அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அனந்தமங்கலம் கோயிலிலிருந்து காணாமல் போயிருந்த ஐம்பொன் சிலைகளின் தகவல்களும் இந்த இணையதளத்தில் வெளியான சிலை பற்றி தகவலும் ஒத்து போயிருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர், அனந்தமங்கலத்தில் காணாமல் போன ஐம்பொன் சிலைகளின் ஆவணங்களை சேகரித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இந்திய தூதரகம் லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறைக்கு தகவல் அனுப்பியது. அவர்களது விசாரணையில் தனியார் கலைப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தை சார்ந்தவர்கள் தங்களிடம் ராமர், லட்சுமணர், சீதை, சிலைகள் இருப்பதை ஒத்துக் கொண்டனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து அந்த சிலைகளை லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட 3 சிலைகளும் இந்திய தூதரகத்திடம் லண்டன் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இன்னும் சில வாரங்களில் லண்டனில் மீட்கப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் தமிழகம் கொண்டு வரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

எச்சில் துப்பினால் ரூ.500; மாஸ்க் போடாவிட்டால் ரூ.200… சாட்டையை சுழற்றும் தமிழக அரசு…!!

MANIMARAN M

கொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…!!

MANIMARAN M

தமிழகத்தில் அக்.1 முதல் “ஒரே நாடு : ஒரே கார்டு” திட்டம்…

MANIMARAN M

சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி… வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்…!!

THAVAMANI NATARAJAN

உலக பிரசித்திப் பெற்ற கோயில் திருவிழா…பக்தர்கள் பங்கேற்க தடை..!! மாவட்ட எஸ்.பி.அறிவிப்பு…

MANIMARAN M

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

MANIMARAN M