Newskadai.com
தமிழ்நாடு

கட்சிபாகுபாடியின்றி அடித்து தூக்கிய மு.க.ஸ்டாலின்… மட்டற்ற மகிழ்ச்சியில் பிரேமலதா, டிடிவி…!

MK Stalin CM
Share this:

தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்கள்.

Sterlite Copper

  1. திரு.ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
  2. திரு.வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
  3. திரு.கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  4. (மார்க்சிஸ்ட்) திரு.ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. திரு.வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
  5. திரு.கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்)
  6. திரு. டி.டி.வி.தினகரன், துணைப் பொதுச் செயலாளர், அம்மா மக்கள்
  7. முன்னேற்றக் கழகம்.
  8. திருமதி பிரேமலதா விஜயகாந்த், மாநில மகளிரணித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
  9. திரு. எல்.கே.சுதீஷ், மாநில துணைச் செயலாளர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
  10. திரு.அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தற்போது மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம்), தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் (தெற்கு), திராவிட முன்னேற்றக் கழகம்
  11. திரு.அழகு முத்துபாண்டியன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
  12. திரு. ராஜா, மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
  13. திரு.ஹென்றி தாமஸ், மாவட்டச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
  14. திருமதி பூமயில், மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (DWFI)
  15. திரு.ஆர்தர் மச்சோடா, துணைச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி.

Share this:

Related posts

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

NEWSKADAI

ஜலகையில் செஞ்சூரி அடித்த கொரோனா… தீயாய் பரவும் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி?

NEWSKADAI

ஜலகண்டாபுரம் டோட்டல் குளோஸ்: ஒரு வாரத்திற்கு இது மட்டும்தான் கிடைக்கும்!!…

THAVAMANI NATARAJAN

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

ரஜினி வேண்டாம்… பாஜகவுக்கு தாவும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை… காரணம் என்ன??

AMARA