கொரானா (covid-19) நோய்தொற்று உலகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை பாடாய்படுத்தி வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமல், தேர்வுகள் எழுத முடியாமல் மாணவர்கள் பரிதவித்து நிற்கின்றனர். இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் இதுநாள்வரை திறக்கப்படவில்லை. எப்பொழுது திறக்கப்படும் என்றும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா மாநில அரசுகள் கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தது. இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) தனது வாதத்தை தெரிவித்தது. அதில்,
- கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை.
- தேர்வுகளை ரத்து செய்வது என்பது மாணவர்களுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது.
- பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் தேர்வுகளை நடத்த முன்வந்துள்ளன.
- தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட மாட்டாது.
- செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீரவேண்டும்.
என்று UGC உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.