Newskadai.com
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : நடுக்கடலில் நடந்தேறிய பயங்கரம்…

Share this:

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த கோபி, சுகுமாரன், வேலவன், காளிதாஸ் ஆகிய நால்வரும் பைபர் படகில் கோடியக்கரை அருகே தென்கிழக்கு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படகை நோக்கி இரண்டு படகுகள் வந்துள்ளன. அந்த படகில் வீச்சரிவாள், கடப்பாறை, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களுடன் வந்த ஆறு இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் தமிழக மீனவர் கோபி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களின் வலைகளையும், செல்போன்களையும், படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவியையும் பறித்துக் கொண்ட இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மீனவர் கோபி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..!!

MANIMARAN M

கொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…!!

MANIMARAN M

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு…!

AMARA

தமிழக வேலை தமிழர்களுக்கே! களத்தில் இறங்கிய வேல்முருகன் ஆர்மி…

MANIMARAN M

விநாயகர் ஊர்வலம்… தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதா…? உயர் நீதிமன்றம் கேள்வி..

MANIMARAN M