Newskadai.com
சினிமா

“வீடு திரும்ப ரெடியான எஸ்.பி.பி”…. மகன் சொன்ன தகவலால் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…!

SPB
Share this:

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென எஸ்.பி.பி.யின் உடல் நிலை மோசமடைந்தது. தனது குரலால் மக்களை மகிழ்வித்த இசை அரசன் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20ம் தேதி அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை நடத்தினர். திரைத்துறையினர் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களின் தூய்மையான அன்பு மற்றும் பிரார்த்தனையால் எஸ்.பி.பி. இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தார்.

SPB

தற்போது மயக்கத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக அவர் படுக்கையில் இருந்ததால் பிசியோ பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்பாவின் உடல் நிலை குறித்து தினமும் ரசிகர்களுக்கு கூறி வரும் எஸ்.பி.பி.சரண் தற்போது வெளியிட்டுள்ள செய்தி அனைவரையும் குஷியாக்கியுள்ளது.

அதாவது எஸ்.பி.பி. தற்போது முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், இருப்பினும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பாலசுப்ரமணியம் இயல்பான உணவை எடுத்துக்கொள்கிறார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் என பதிவிட்டுள்ளார். இந்த செய்தியைக் கேட்ட திரையுலகினர் மற்றும் எஸ்.பி.பி. ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Share this:

Related posts

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA

சிங்கமும், சிறுத்தையும் எதிர்த்தாச்சு… மற்ற நடிகர்கள் வாய் திறப்பார்களா?

NEWSKADAI

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

NEWSKADAI

அந்த விஷயத்தில் தம்பியை மிஞ்சுவாரா செல்வராகவன்?… தனுஷ் பட ஹீரோயினுடன் வெளியான அசத்தல் போஸ்டர்…!!

MANIMARAN M

சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி??

AMARA

திரையரங்குகள் திறக்கபடுமா..? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்…

MANIMARAN M