Newskadai.com
சினிமா

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

Share this:

இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அரசியல் வாதிகளும், சினிமா பிரபலங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதை தொடர்ந்து பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய போதும், குடும்பத்தினர் தன்னை தனிமையில் விட்டு வருத்தப்படக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் சேர்ந்தார். சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

கடந்த 14ம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதையடுத்து பல வதந்திகள் அப்போது பரவின. இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து விளக்கமளித்த அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண், அப்பாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அவருடைய உடல் நிலை குறித்து தாங்களே தகவல் கொடுக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

 

SPB

 

இதையடுத்து தினந்தோறும் எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று சரண் வெளியிட்ட வீடியோவில், அப்பா மயக்கத்தில் இல்லை என்றும், அவர் கண்விழித்துவிட்டார். தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். தம்ஸ் அப் காட்டும் அளவிற்கு அசைவுகள் இருக்கின்றன. இயல்பாக சுவாசிக்கிறார், இருந்தாலும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

 

View this post on Instagram

 

#Spb heathupdate 17/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

தற்போது எஸ்.பி.பி. உடல் நலம் நல்ல நிலையில் முன்னேறி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பா நேற்று இருந்த அதே கண்டிஷனில் தான் இருக்கிறார். ஆபத்தான நிலையை கடந்துவிட்டார். அதை மருத்துவர்கள் நல்ல அடையாளமாக பார்க்கிறார்கள். உங்களுடைய பிரார்த்தனைகள், வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Share this:

Related posts

“மனிதாபிமானமற்றவர்களாகி விட்டோம்”… நடிகர் மாதவன் சாடல்…!!

NEWSKADAI

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

NEWSKADAI

“நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் உயிரை பறிக்கிறது”.. சூர்யா கடும் கண்டனம்…!!

AMARA

இங்கு தான் நிரந்தர நித்திரை கொள்ளப்போகிறார் எஸ்.பி.பி… நாளை இறுதிச்சடங்கு… பண்ணை வீட்டின் புகைப்படம் இதோ…!

AMARA

“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…!!

AMARA

கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!

AMARA