Newskadai.com
சினிமா

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

SPB
Share this:

இசையுலகை தனது குரலால் ஆட்சி செய்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதையடுத்து பல வதந்திகள் அப்போது பரவின. ஆனால் மறுநாளே எஸ்.பி.பி. கண்விழித்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் நல்ல செய்தி சொன்னது. ஆனால் மறுநாளில் இருந்தே எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

SPB

இதையடுத்து திரையுலக ஜாம்பவான்களான இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, ரஜினி, கமல், ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலரும் எஸ்.பி.பி. பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூட நம்பிக்கை தரும் நல்ல செய்தி எதுவும் இல்லை. இந்நிலையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் எஸ்.பி.பி.க்காக உலகம் முழுவதும் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திரைப்பிரபலங்கள், இசைப்பிரியர்கள் என கோடிக்கணக்கான மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி. சரண் ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், அப்பாவின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆனால் எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கை உள்ளது, உங்களுடைய பிரார்த்தனைகள் அவரை மீண்டும் எழ வைக்கும். அதை உணர முடிகிறது. திரையுலகில் என தந்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு பிரார்த்தனைக்கு நன்றி. நன்றி சொல்ல வார்த்தை இல்லை. தலைவணங்குகிறோம். இந்த பிரார்த்தனைகள் எல்லாம் வீண் போகாது. கடவுளுக்கும் மனசாட்சி இருக்கு, கண்டிப்பா அப்பாவை நம்மிடம் மீட்டு தந்துவிடுவார். ஒரு பெரிய கும்பிடு எல்லாருக்கும். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது குடும்பத்தினர் சார்பாக நன்றி. நீங்கள் செய்யும் இந்த பிரார்த்தனையால் எங்கள் குடும்பம் மிகப்பெரிய தைரியத்தில் உள்ளது. நன்றி என கண்கலங்கிய படி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே அந்த வீடியோ… 



Share this:

Related posts

தங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு வைரலாகும் வீடியோ…!

THAVAMANI NATARAJAN

எஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா…!

AMARA

அபாய கட்டத்தில் எஸ்.பி.பி… தீவிர ஆலோசனையில் மருத்துவர்கள்… தற்போதைய நிலவரம் என்ன?

AMARA

“லவ் யூ தலைவா”… விஜய் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை… உருக்கமான கடைசி பதிவு…!!

THAVAMANI NATARAJAN

“வீடு திரும்ப ரெடியான எஸ்.பி.பி”…. மகன் சொன்ன தகவலால் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…!

AMARA

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI