நாம் இதுவரை ஊசி மழை, ஆலங்கட்டி மழைகளையே கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் பிரேசில் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து இருக்கிறது. இது மிகவும் விநோதமான மழை என்றே சொல்லலாம்.
சாண்ட பிலோமினா என்பது பிரேசில் நாட்டில் உள்ள சிறிய நகரம். பிரேசிலில் இருக்கும் ஏழ்மையான பகுதிகளில் இந்நகரமும் ஒன்றாகும். கடந்த வாரத்தில் அங்கு மழைப்போல் வானத்தில் இருந்து கற்கள் கொட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல் இப்போதுதான் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. சுமார் 11 மணியளவில் வானத்தில் இருந்து திடீரென கற்கள் விழுந்துள்ளது. கருப்பு நிறத்தில் உள்ள இந்த கற்கள் மக்கள், கார்கள், மற்றும் வீடுகள் மீதும் விழுந்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட கற்கள் வானத்தில் இருந்து விழுந்துள்ளது.
ஒவ்வொரு கற்களும் 10 செமீ அளவும் 200-300 கிராம் எடையும் கொண்டுள்ளது. விண்கள் ஒன்றின் உடைந்த பாகம் என்றும் இந்த கற்கள் 4.6 பில்லியன் வருடம் பழமை வாய்ந்தவை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
4.6 பில்லியன் வருடம் பழமை வாய்ந்த விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, வெடித்து இப்படி கற்களாக வானத்தில் இருந்து விழுந்துள்ளது. மொத்தம் 40 கிலோ கற்கள் இவ்வாறு விழுந்துள்ளது. இது மிகவும் அரிதானது என்றும் உலகில் வெறும் 1.1 சதவீத விண்கற்கள் மட்டுமே இதுப் போன்று காணப்படுவதாக ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.