Newskadai.com
சினிமா

எஸ்.பி.பி. உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்… போலீசாரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனை…!

Share this:

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. வெளிநாட்டு மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனைகள் பெற்று தொடர்ந்து 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளது.

இதனால் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக திரைத்துறை பிரபலங்கள் பலரும் மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.எஸ்.பி.பி.யின் மனைவி சாந்தி, மகன் எஸ்.பி.பி.சரண், மகள் பல்லவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ளனர். எஸ்.பி.பி.க்கு அடுத்தகட்டமாக என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கலாம் என மருத்துவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர். அந்த சிகிச்சை முறைகள் குறித்து மகன் சரணிடமும் விளக்கப்பட்டது.

சற்று முன்பு இயக்குநர்கள் பாரதிராஜா, வெங்கட் பிரபு ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மருத்துவமனைக்கு வர உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேற்று இரவு முதலே மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.


Share this:

Related posts

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. விழிப்புடன் நல்ல நிலையில் இருக்கிறார்”… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…!!

NEWSKADAI

“உன்னத மனிதர் உறங்குகிறார்”.. தந்தையின் மறைவு குறித்து பிரபல நடிகரின் கண்ணீர் பதிவு…!!

THAVAMANI NATARAJAN

ஐசியூ- வில் வனிதாவின் 3வது கணவர்; வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஹரி…!!

AMARA

சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்… பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

AMARA