Newskadai.com
சினிமா

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி… வைரல் வீடியோ…!!

Share this:

இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அரசியல் வாதிகளும், சினிமா பிரபலங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. கோலிவுட்டைப் பொறுத்தவரை சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தனர். தற்போது பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: http://அயோத்தியில் பிரதமர் மோடி… காண கிடைக்காத அரிய புகைப்படங்கள்…!!

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாகவே எனக்கு சில பிரச்சனைகள் இருந்தது. சளி பிடித்திருந்தது, மேலும் காய்ச்சலும் விட்டு விட்டு வந்தது. இதனை தொடர்ந்து நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். மருத்துவர்கள் பரிசோதனையின் முடிவில் பாசிடிவ் வந்ததாக கூறினார். ஆனால் மிக மிக குறைந்த அளவில் தான் தொற்று உள்ளது. அதனால் மருத்துவர்கள் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்கள். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்ள விடமாட்டார்கள், கஷ்டப்படுவார்கள். அதனால் தான் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளேன்.

மேலும் படிக்க: http://ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

தற்போது நான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் என்னை நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள்.  நான் சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்புவேன் என்று கூறியுள்ளார். SP Balasubrahmanyam

 


Share this:

Related posts

எஸ்.பி.பி.க்காக வீதிக்கு வந்த ரசிகர்கள்… , “பாடும் நிலா எழுந்து வா” என உருக்கமான வேண்டுதல்….!

AMARA

ஒரே வாரத்தில் இன்னொரு தமிழ் நடிகர் கொரோனாவுக்கு பலி… அதிர்ச்சியில் திரையுலகம்…!

NEWSKADAI

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA

சிங்கமும், சிறுத்தையும் எதிர்த்தாச்சு… மற்ற நடிகர்கள் வாய் திறப்பார்களா?

NEWSKADAI

இந்த கட்டணங்களை எல்லாம் செலுத்த முடியாது… தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிராக கொதித்தெழுந்த டி.ஆர்….!

NEWSKADAI

#Doctor நெட்டிசன்களிடம் சிக்கிய அனிருத்… செல்லம்மா பாடல் இந்த பாடலின் காப்பியா? #SK| #newskadai

NEWSKADAI