Newskadai.com
சினிமா

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

Share this:

கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவரது உடல் நிலை சில நாட்களிலேயே மோசமானது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் நிலை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

SPB

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையால் எஸ்.பி.பி. குணமடைந்து வந்தார். கடந்த 6ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் செயல்பாட்டை முன்னேற்றுவதற்காவும், நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்த இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி.பி.யின் உயிர் சரியாக இன்று மதியம் 1.04 மணிக்கு பிரிந்ததாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் இயங்கும்…!!! – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்…

MANIMARAN M

தடைகளை தகர்த்த சூர்யா… தீபாவளிக்கு திரையிடப்படுகிறதா ‘சூரரைப் போற்று’?

AMARA

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN

இயக்குநர் அட்லி வீட்டில் திடீர் மரணம்… துடிதுடிக்கும் சோகத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு…!!

AMARA

அக்டோபர் 1-ல் தியேட்டர்கள் திறப்பு?… மத்திய அரசுடன் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் நிறைவு…!!

AMARA

200 நாட்களுக்கு பிறகு நாளை 15 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு..!!!

MANIMARAN M