Newskadai.com
சினிமா

“உயிருக்கு மிகவும் ஆபத்தான கட்டத்தில் எஸ்.பி.பி”… மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

SPB
Share this:

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென எஸ்.பி.பி.யின் உடல் நிலை மோசமடைந்தது. தனது குரலால் மக்களை மகிழ்வித்த இசை அரசன் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20ம் தேதி அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை நடத்தினர். திரைத்துறையினர் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களின் தூய்மையான அன்பு மற்றும் பிரார்த்தனையால் எஸ்.பி.பி. இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தார்.

SPB

தற்போது மயக்கத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை தொடர்வதாகவும், இயல்பான கூழ்ம உணவுகளை எஸ்.பி.பி. எடுத்துக்கொள்வதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட பதிவில் கூட அப்பா வீடு திரும்ப மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார் என கூறியிருந்தார். இதனால் அவருடைய உடல் நிலை நல்ல முறையில் தேறிவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி.யின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எம்.ஜி.எம். மருத்துவமனையின் சிறந்த மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். எஸ்.பி.பி உடல்நிலை தேறிவிட்டார் என்ற மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களும், திரையுலகினரும் தற்போது மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


Share this:

Related posts

எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது… பிரதமருக்கு முதல்வர் கடிதம்…!!!

MANIMARAN M

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

POONKUZHALI

“மீண்டும் கவலைக்கிடம்”… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து வெளியான மருத்துவ அறிக்கை…!!

AMARA

சொன்னதை செய்து காட்டிய சூர்யா… “சூரரைப் போற்று” ரூ.5 கோடியிலிருந்து சினிமாத்துறைக்கு முதற்கட்ட நிதியுதவி…!!

AMARA

காதலரை திருமணம் செய்தார் காஜல் அகர்வால்… அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

NEWSKADAI

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA