Newskadai.com
சினிமா

எப்படியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்?… சற்று முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

Share this:

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது முதல் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் சென் டரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி முதலே எஸ்.பி.பி.யின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மா கருவிகளுடன் ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற்று பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென கடந்த 20ம் தேதி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு பிரார்த்தனையில் திரையுலகினர், பொதுமக்கள், இசையுலகினர் என உலகம் முழுவது லட்சக்கணக்கானோர் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.

அதன் பலனாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து ஐசியுவில் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு பல்துறை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா மற்றும் லண்டனில் உள்ள சர்வதேச வல்லுநர்களிடமும் சிகிச்சை பற்றி ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டது. அதன் மூலம் எக்மோ மூலம் நாங்கள் அளித்து வரும் சிகிச்சை சரியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. அதில், உங்களுடைய தொடர் ஆதரவிற்கும், கூட்டு பிரார்த்தனைக்கும் நன்றி. அப்பாவின் உடல் நிலை நலமாக இருக்கிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த அறிக்கை உண்மை இல்லை என்று எஸ்.பி.பி.சரண் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார். அதில், அப்பாவின் உடல் நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு தினமும் நான் மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் அப்பாவிற்கு தற்போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று மாலை மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு அப்பாவின் உடல் நிலை குறித்து நானே தகவலை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐசியூவில் தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ போன்ற உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. எங்களுடைய மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“வடிவேல்” பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி…. நிதியுதவி…!!

THAVAMANI NATARAJAN

ஆசிர்வாதம் கிடைத்தது… அற்புதம் நடந்தது… ரஜினி குரலைக் கேட்டு புத்துயிர் பெற்ற ரசிகர்…!

THAVAMANI NATARAJAN

வனிதாவை வாய் கிழிய விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா… கைது செய்த பெண் காவல் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி…!

NEWSKADAI

“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…!!

AMARA

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

NEWSKADAI

“தன்னிச்சையாக செயல்பட வேண்டாம்”… ரசிகர்களை அடக்க சாட்டையை சுழட்டும் ரஜினி…!!

AMARA