Newskadai.com
சினிமா

தொடர்ந்து கவலைக்கிடம்… எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான அறிக்கை…!!

SPB
Share this:

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது முதல் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் சென் டரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி முதலே எஸ்.பி.பி.யின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மா கருவிகளுடன் ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற்று பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென இன்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு பிரார்த்தனையில் நடிகர்கள் சிவக்குமார், பிரபு, சத்யராஜ், பாடகி சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி. அவர்களின் குரல் மட்டுமே ஒலித்தது என்று கூறும் அளவிற்கு மக்களும் இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

SPB
 

பல இடங்களில் எஸ்.பி.பி. விரைவில் திரும்ப வேண்டுமென மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது எஸ்.பி.பி. உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எக்மோ கருவியுடன் சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மீரா மிதுனுக்கு சூசமாக பதிலடி கொடுத்த சூர்யா… ரசிகர்களுக்கு வைத்த அன்பான வேண்டுகோள்…!!

AMARA

தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்…” “ஹிந்தி தெரியாது போடா”

MANIMARAN M

எஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா…!

AMARA

நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டிய டிக்-டாக் காதலன்… தூக்கில் தொங்கிய சீரியல் நடிகை…!!

THAVAMANI NATARAJAN

அமைதியாக இருந்த அஜித்தையே சீண்டிவிட்டாங்களே… வெகுண்டெழுந்து வெளியிட்ட அதிரடி அறிக்கை…!

AMARA

“பிரார்த்தனையின் சக்தியே தனி”… எஸ்.பி.பி.க்காக பிரார்த்திப்போம் வாருங்கள்… விவேக்கின் உருக்கமான வேண்டுகோள்…!!

AMARA