Newskadai.com
சினிமா

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

SPB
Share this:

இசையுலகை தனது குரலால் ஆட்சி செய்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்திய போதும், குடும்பத்தினர் தன்னை தனிமையில் விட்டு வருத்தப்படக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் சேர்ந்தார். சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 14ம் தேதி எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதையடுத்து பல வதந்திகள் அப்போது பரவின. ஆனால் மறுநாளே எஸ்.பி.பி. கண்விழித்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் நல்ல செய்தி சொன்னது. ஆனால் மறுநாளில் இருந்தே எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து திரையுலக ஜாம்பவான்களான இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, ரஜினி, கமல், ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலரும் எஸ்.பி.பி. பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு எஸ்.பி.பி. சிகிச்சை பெற்று வரும் எம்.ஜி.எம். ஹெல்த் சென்டரில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த அறிக்கையில், கொரோனா சிகிச்சைக்காக எம்.ஜி.எம். ஹெல்த் கேரில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

கொடைக்கானலில் கும்மாளம்… நடிகர்கள் சூரி, விமல் மீது வழக்குப்பதிவு…!

NEWSKADAI

எஸ்.பி.பி-யின் தற்போதைய உடல் நிலை என்ன?… மகன் எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட வீடியோ…!

AMARA

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI

அக்டோபர் 1-ல் தியேட்டர்கள் திறப்பு?… மத்திய அரசுடன் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் நிறைவு…!!

AMARA

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய்… மகள் ஆராத்யாவும் நலம்…!!

NEWSKADAI

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகருக்கு அடித்தது ஜாக்பாட்… விஜய் வீட்டிலிருந்து வந்த சர்ப்ரைஸ் போன்கால்…!!

THAVAMANI NATARAJAN