Newskadai.com
சினிமா

இங்கு தான் நிரந்தர நித்திரை கொள்ளப்போகிறார் எஸ்.பி.பி… நாளை இறுதிச்சடங்கு… பண்ணை வீட்டின் புகைப்படம் இதோ…!

Share this:

 

SPB
கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவரது உடல் நிலை சில நாட்களிலேயே மோசமானது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் நிலை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

 

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையால் எஸ்.பி.பி. குணமடைந்து வந்தார். கடந்த 6ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் செயல்பாட்டை முன்னேற்றுவதற்காவும், நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது.

 

ஆனால் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று அவருக்கு அடுத்தக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சரியாக மதியம் 1.04 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.

SPB
இன்று காலை எஸ்.பி.பி.க்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளித்தும் பலன் இல்லை என்றும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

தற்போது சரியாக மாலை 3.45 மணி அளவில் எம்ஜிஎம் மருத்துவமனையிலிருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைவரும் மாஸ்க் அணிந்து , சமூக இடைவெளியுடன் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

 

நாளை காலை சென்னையை ஒட்டிய செங்குன்றத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அந்த பண்ணை வீட்டின் புகைப்படம் இது தான்.

Share this:

Related posts

தடைகளை தகர்த்த சூர்யா… தீபாவளிக்கு திரையிடப்படுகிறதா ‘சூரரைப் போற்று’?

AMARA

‘வடிவேல்’ பாலாஜி குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்… துக்கத்தில் தோள் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

AMARA

த்தூ… பெண் பிள்ளைகள் ஸ்கூல் முன்னாடி ஆபாச பட போஸ்டரயாடா ஒட்டுறீங்க… சீறி எழுந்த கோவை இளைஞரின் வைரல் வீடியோ…!

AMARA

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI

பிக்பாஸ் வீட்டிற்குள் கதறி அழுத அனிதா சம்பத்… வைரல் வீடியோ…!

NEWSKADAI

‘சீறு’ பட பாடகர் திருமூர்த்தி உட்பட 12 பேருக்கு தொற்று… ஊத்தங்கரையை உலுக்கி எடுக்கும் ‘கொரோனா’…!

AMARA