Newskadai.com
சினிமா

சென்னை வீட்டில் எஸ்.பி.பி. உடல் அஞ்சலிக்காக வைப்பு… ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி…!

Share this:

கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவரது உடல் நிலை சில நாட்களிலேயே மோசமானது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் நிலை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையால் எஸ்.பி.பி. குணமடைந்து வந்தார். கடந்த 6ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் செயல்பாட்டை முன்னேற்றுவதற்காவும், நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் பிசியோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவர் நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை நடத்தினர். ஆனால் இன்று சரியாக மதியம் 1.04 மணிக்கு எஸ்.பி.பி. உயிர் பிரிந்தது. தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.க்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருத்துவர்களின் முயற்சிக்கு பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது சரியாக மாலை 3.45 மணி அளவில் எம்ஜிஎம் மருத்துவமனையிலிருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தீவிர போலீசாரின் பாதுகாப்பிற்கிடையே பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முறையாக மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்த படி நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து எஸ்.பி.பி. உடல் அவருக்கு சொந்தமான தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதிச்சடங்கு இன்று இரவு அல்லது நாளை காலை நடக்குமா? என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


Share this:

Related posts

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M

“பிரார்த்தனையின் சக்தியே தனி”… எஸ்.பி.பி.க்காக பிரார்த்திப்போம் வாருங்கள்… விவேக்கின் உருக்கமான வேண்டுகோள்…!!

AMARA

ஒரே வாரத்தில் இன்னொரு தமிழ் நடிகர் கொரோனாவுக்கு பலி… அதிர்ச்சியில் திரையுலகம்…!

NEWSKADAI

பிரபல நடிகையை அதிர்ச்சியில் மூழ்கடித்த “கொரோனா”… உருக்கமான பதிவால் ரசிகர்கள் கவலை…!

AMARA

இந்தியன் 2 கிரேன் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் கொடுத்த ரூ.4 கோடி நிதி உதவி…!!

AMARA

வனிதாவை வாய் கிழிய விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா… கைது செய்த பெண் காவல் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி…!

NEWSKADAI