Newskadai.com
சினிமா

சொன்னதை செய்து காட்டிய சூர்யா… “சூரரைப் போற்று” ரூ.5 கோடியிலிருந்து சினிமாத்துறைக்கு முதற்கட்ட நிதியுதவி…!!

Surya
Share this:

நடிகர் சூர்யா – இறுதிச்சுற்று பட புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தடைபட்டிருந்தது. இந்நிலையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை போல, சூரைப்போற்று திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் படக்குழு அதனை மறுத்து வந்தது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா சூரரைப் போற்று திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக அறிவித்தார்.

Surya

மேலும் சூரரைப் போற்று வெளியிட்டு தொகையில் இருந்து 5 கோடி ரூபாயை பகிர்ந்தளிக்க உள்ளதாகவும், பொதுமக்களுக்கும்‌, திரையுலகை சார்ந்தவர்களுக்கும்‌, தன்னலம்‌ பாராமல்‌ கொரானா யுத்த களத்தில்‌ முன்னின்று பணியாற்றியவர்களுக்கும்‌, இந்த ஐந்துகோடி ரூபாய்‌ பகிர்ந்தளிக்கப்படும்‌ என்றும் தெரிவித்தார்.

Surya

அதன்படி முதற்கட்டமாக ரூ.1.5 கோடிக்கான தொகை திரையுலகினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதில் திரைத்துறை தொழிலாளர்களின் அமைப்பான பெப்ஸிக்கு ரூ.80 லட்சமும், இயக்குநர்கள் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.30 லட்சமும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலைகளை இயக்குநர் பாரதிராஜா, நடிகர் நாசர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் சூர்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான சிவக்குமார் வழங்கினார்.


Share this:

Related posts

அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லையாம்… தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…!

AMARA

“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…!!

AMARA

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA

வனிதாவை வாய் கிழிய விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா… கைது செய்த பெண் காவல் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி…!

NEWSKADAI

“பாகுபலி” இயக்குநர் ராஜமெளலிக்கு கொரோனா தொற்று உறுதி… குடும்பத்தினரையும் விட்டு வைக்காத கொடுமை…!

AMARA

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M