Newskadai.com
சினிமா

வைரல் பாட்டியை வலை வீசி தேடும் வில்லன் நடிகர்… மாஸ்டர் பிளானுடன் வெயிட்டிங்…!

Share this:

வைரஸ் தொற்றும் அதனால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் நமக்கு பல புதிய நிஜ ஹீரோக்களை அடையாளம் காட்டியது. அப்படி கொரோனாவால் இந்திய மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ தான் பாலிவுட் நட்சத்திரம் சோனு சூட்.

தமிழக மக்களுக்கு அருந்ததி பட வில்லன். ஒஸ்தி, கள்ளழகர், தேவி போன்ற திரைப் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். கொரோனாவால் எல்லா நட்சத்திரங்களும் வீட்டுக்குள் முடங்கி கிடக்க, இந்த ஒரு நட்சத்திரம் மட்டும் வீதிக்கு வந்து வெளிச்சம் பாய்ச்சியது. பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலை செய்த தொழிலாளர்களுக்கு பெரும் சோதனையாக இருந்தது கொரோனா காலம்.

நாட்கள் கணக்கில் தொடங்கிய ஊரடங்கு மாதக்கணக்காய் மாறியபோது புலம்பெயர் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். கையில் காசு இல்லாமல் பசி பட்டினியால் வாடியவர்கள் மனது எப்படியாவது சொந்த ஊர் சென்றுவிடலாம் என ஏங்கி தவித்தது. பேருந்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டு இருந்தது அரசால். மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் போதுமானதாக இல்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநில அரசுகளுடன் கைகோர்த்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு செல்ல உதவினார். மீடியாக்களின் வெளிச்சம் அவர் மீது பட்டது இவரை சில அரசியல்வாதிகள் விமர்சனம் செய்தாலும் மனம் தளராது தனது சேவையை செய்துகொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது அதில் மாடுகளுக்கு பதில் தன் மகள்களை ஏரில் பூட்டி உழுது கொண்டிருந்தான் விவசாயி. காண்பவர் மனதை கலங்க செய்தது அந்த வீடியோ. அந்த குடும்பத்திற்கு சத்தமில்லாமல் உதவியிருக்கிறார் சோனு சூட். அவர்களுக்கு இரண்டு காளை மாடுகளை வாங்கி கொடுத்ததுடன் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்திருக்கிறார்.

இன்று நாம் கண்டு கொண்டிருக்கும் வைரல் வீடியோ ஒரு பாட்டி தெருவில் நின்று சிலம்பம் சுற்றி தனக்கான பொருளாதார தேவைக்காக மற்றவர்களிடம் கையேந்தும் வீடியோ. இப்போது சோனு சூட் அந்த பாட்டியை தேடிக் கொண்டிருக்கிறார் அவரது சிலம்பக் கலையை மற்ற பெண்களுக்கும் கற்றுக்கொடுக்கும் ஒரு சிலம்ப பள்ளியை நிறுவுவது அவரது எண்ணம்


Share this:

Related posts

எப்படியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்?… சற்று முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

NEWSKADAI

இதுவா ரஜினியின் “அண்ணாத்த” பட கதை?…. செம்ம கேவலமா இருக்கே என தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்…!!

NEWSKADAI

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்… எந்த கோவிலில் நடக்கப்போகுது தெரியுமா?

AMARA

#Doctor நெட்டிசன்களிடம் சிக்கிய அனிருத்… செல்லம்மா பாடல் இந்த பாடலின் காப்பியா? #SK| #newskadai

NEWSKADAI

“எஸ்.பி.பி. விழிப்புடன் நல்ல நிலையில் இருக்கிறார்”… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…!!

NEWSKADAI

அடுத்தடுத்து அதிர்ச்சி… அசுரன் பட நடிகர் கொரோனாவிற்கு பலி..!

NEWSKADAI