கூட்டமாக படுத்து தூங்கும் யானைகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அது குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
உருவத்தில் பெரியதாக தெரிந்தாலும் குழந்தை போன்று பழகும் யானை அனைவருக்கும் பிடித்த ஒரு உயிரினமாகும். ஒரு யானை இருந்தால் மிகப்பெரிய அளவில் ஒரு வனத்தையே உருவாகும். நாளொன்றுக்கு அதிகமான உணவை எடுத்துக் கொள்ளும் யானை சுமார் 20 கிலோ மீட்டர் வரை நடந்து செல்லக்கூடியது. காட்டு யானைகள் எப்பொழுதும் கூட்டமாகவே சுற்றித்திரியும். யானைகள் பொதுவாக நின்றுக் கொண்டு தூங்கும். அதுவும் தனது குடும்பத்துடன் கூட்டமாக யானைகள் தூங்கும் அழகிய காட்சி அண்மையில் வெளியாகி இணைய தளவாசிகளை கவர்ந்து வருகிறது.
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரியான பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் யானைகள் கூட்டமாக தரையில்படுத்து தூக்குகிறது. கூட்டமாக ஒரே குடும்பமாக படுத்து தூங்கும் யானைகளின் வீடியோ ட்ரோன் மூலம் எடுத்து வெளியிட்டுள்ளது சீனா சென்டரல் டெலிவிஷன். அந்த வீடியோவில் தாய் யானையின் மீது குட்டி யானை தவழ்ந்து படுப்பதும், அதன் மீது இருப்பதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. வனத்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் பலரது மனதை கவர்ந்து வருகிறது.
This sleeping elephant family is best thing on internet today. Via CCTV. pic.twitter.com/1WahEM7eYK
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 9, 2021