Newskadai.com
சினிமா தமிழ்நாடு

ரூ.25 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் – ஏன் தெரியுமா..?

Sivakarthikeyan actor
Share this:

கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனினும், வைரஸ் பாதிப்பும் அதன் உயிரிழப்பும் குறைந்த பாடில்லை. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்த நிலையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், கொரோனா தடுப்பு மருந்து ஆகியவைகளின் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன.

இதன் காரணமாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொது நிவாரண நிதியை வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர், பிரபலங்கள் உட்பட பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.25 லட்சம் நிதியை வழங்கினார். இதேபோன்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் அஜித் ஆகியோர் தலா ரூ.25 லட்சமும், இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் தலா ரூ. 10 லட்சமும் பொது நிவாரண நிதி வழங்கியுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி கவிஞர் வைரமுத்து, சௌந்தர்யா ரஜினிகாந்த், சிவக்குமார் குடும்பம், விஜயகாந்த் உள்ளிட்டோரும் கொரோனா நிதி வழங்கியுள்ளனர்.


Share this:

Related posts

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…!

MANIMARAN M

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்..!

MANIMARAN M

சென்னையில் கட்டுக்குள் வரும் கொரோனா… அமைச்சர்கள் குழு திடீர் ஆலோசனை…!!

AMARA

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA