Newskadai.com
சினிமா

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

Share this:

இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அரசியல் வாதிகளும், சினிமா பிரபலங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதை தொடர்ந்து பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

 

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கடந்த சில நாட்களாகவே எனக்கு சில பிரச்சனைகள் இருந்தது. சளி மற்றும் காய்ச்சல் விட்டு விட்டு வந்தது. இதனை தொடர்ந்து நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் மிக மிக குறைந்த அளவில் தான் தொற்று உள்ளது என்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்கள். ஆனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால் வீட்டில் இருப்பவர்களும் சேர்ந்து கஷ்டப்படுவார்கள். அதனால் தான் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகியுள்ளேன், மற்றபடி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் நான் நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

 

 

இதை அடுத்து திரையுலக முன்னனி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நலம் குறித்து தினந்தொரும் மருத்துவமனை நிர்வாகம் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அறிக்கையை வெளியிட்டு வந்தது, இந்நிலையில் கடந்த 14ம் தேதி எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இந்த செய்தி அவருடைய குடும்பம், திரையுலகினர் மற்றும் ரசிகர் என அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூகவலைலங்களில் பரவியதை தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், அப்பா வென்டிலேஷனில் உள்ளார், அவர் உடல் நிலை சீராக உள்ளது. தயவு செய்து வதந்திகாளை பரப்ப வேண்டாம். அவருடைய உடல் நிலை குறித்த தகவல்களை நாங்களே வெளியிடுவோம் என தெரிவித்தார்.

 

SPB

 

இந்நிலையில் இன்று வெளியான மருத்துவமனை அறிக்கையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும், கண் விழித்துப் பார்பதாகவும் அவர் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதால் வென்டிலேட்டர் கொண்டு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Share this:

Related posts

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்… எந்த கோவிலில் நடக்கப்போகுது தெரியுமா?

AMARA

கருத்து சொல்ல மட்டுமல்ல… சொல்லால் விமர்சித்தவர்களை செயலால் திருப்பி அடித்த ஜோதிகா…!

AMARA

“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…!!

AMARA

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA

சூர்யாவின் முரட்டு ரொமான்ஸ்… தாறுமாறு வைரலாகும் “காட்டு பயலே” லிரிக் வீடியோ…!!

NEWSKADAI

3 ரசிகர்களின் உயிரை காவு வாங்கிய பிரபல நடிகரின் பேனர்… பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்…!

NEWSKADAI