Newskadai.com
உலகம்

அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி… சிங்கப்பூர் குடிமகனின் கைதால் பரபரப்பு…!

Share this:

கொரோனாவை சீனா தான் பரப்பியது என்று தொடங்கிய அமெரிக்கா, சீனா பனிப்போர் உச்சத்தை அடைந்திருக்கிறது. உலக பொருளாதாரம், மேலாண்மை, அதிகாரம் இவற்றை கைபற்ற இரு நாடுகளும் ஒருவருகொருவர் கடும் குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையை திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள சீன தூதரகங்கள் உளவு பார்ப்பதாகக் கூறி ஹூஸ்டன், சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் அமைந்துள்ள சீன தூதரகங்களை மூடச்சொல்லி உத்தரவிட்டது அமெரிக்க அரசு. இதற்கு பதிலடியாக தன் நாட்டில் வூகான் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடச் சொல்லி சீனா உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜுன் வீ இயோ என்ற சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் அரசியல் ஆலோசனை மையம நடத்தி வரும் ஜுன் வீ இயோ சீன உளவு அமைப்புக்காகத் தகவல்களைத் திரட்டினார் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. கைது செய்ப்பட்ட ஜுன் வீ இயோ இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறுகிறது.
மேலும் சீன ராணுவத்துடன் தொடர்பில் இருந்தார் என்று மற்றொரு ஆய்வு மாணவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது அமெரிக்கா.


Share this:

Related posts

தமிழகத்திற்கு கைக்கொடுக்கும் நெதர்லாந்து – கண்டெய்னரில் இறக்குமதியாகும் ஆக்சிஜன்

MANIMARAN M

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

பண மழையாய் மாறிய ‘கல்’ மழை… விசித்திர கற்களால் அடித்தது யோகம்…!!

THAVAMANI NATARAJAN

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

அமெரிக்காவுக்கே இந்த நிலையா?…. ஆன்லைன் கல்விக்காக ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் சிறுவர்கள்…!!

THAVAMANI NATARAJAN