Newskadai.com
சினிமா

சிம்பு நெற்றி பொட்டில் பாய்ந்த குண்டு… மாநாடு பட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து பதறும் ரசிகர்கள்…!

Simbu
Share this:

சுசீந்திரன் உடன் ஈஸ்வரன் பட ஷூட்டிங்கை முடித்த சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு படு தீவிரமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தீபாவளி ஸ்பெஷலாக ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. இடையில் உண்மையான பாம்பை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதால் அந்த டீசர் மற்றும் போஸ்டரை நீக்க வேண்டுமென இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Maanaadu

இந்த பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சிம்பு தனது பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவருமே அறிந்த செய்தியே. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் தலையில் குல்லாவுடன் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்த பிறகும் ரத்தம் சொட்ட சொட்ட சிம்பு தொழுது கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. கண்டிப்பாக கதை வேற லெவலுக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகரித்துள்ளது.ஆனாலும் மத பிரச்சனையை தூண்டும் விதமாக இருக்கிறது என போஸ்டர் விவகாரத்தில் யாராவது பஞ்சாயத்தை ஆரம்பிக்கவும் வாய்ப்புள்ளது.


Share this:

Related posts

வைரல் பாட்டியை வலை வீசி தேடும் வில்லன் நடிகர்… மாஸ்டர் பிளானுடன் வெயிட்டிங்…!

NEWSKADAI

நம்மவருக்கு பிறந்த நாள்… கட்சி தொண்டர்கள், ரசிகர்களுக்கு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்பிரைஸ்…!

THAVAMANI NATARAJAN

“வாய் உள்ள பிள்ளை தான் பொழைக்கும்”… தனுஷை புகழ்ந்து பேசியே காரியத்தை சாதித்த பிரபல நடிகை…!

NEWSKADAI

கொரோனா உடையில் சூடான நடிகை மீனா… வைரலாகும் புகைப்படங்கள்…!

THAVAMANI NATARAJAN

எஸ்.பி.பி. உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்… போலீசாரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனை…!

NEWSKADAI

ட்விட்டரில் கட்டிப்புரண்டு சண்டை… இரண்டு நடிகைகளுக்கிடையே மாட்டிக்கொண்ட பிரபல இயக்குநர்…!!

NEWSKADAI