கோலிவுட்டில் சிம்பு, நயன்தாரா காதல் கதையை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வல்லவன் படத்தில் இருவருக்கும் இடையே காதல் பற்றியது. இதுகுறித்த செய்திகள் இணையத்தில் வெளியான போதும் இருவரும் மறுப்பு தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தனர். இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதற்கு காரணம் சிம்பு தான் நினைத்த நயன் அவரை நிரந்தரமாக பிரிந்தார். அதன் பின்னர் இருவரும் படங்களில் கூட நடிக்காமல் இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்த போது கூட இருவரும் இணைந்து நடிப்பது போன்ற காட்சிகள் பெரும்பாலும் தனித்தனியாகவே எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
சிம்புவுடனான பிரேக்கப்பிற்கு பிறகு நயன்தாரா, நடன இயக்குநர் பிரபுதேவாவை காதலித்து கடைசியாக திருமணம் வரை சென்ற காதல் இருவருக்கிடையிலான பிரச்சனையால் நின்று போனது. தற்போது நானும் ரவுடி தான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதையடுத்து சிம்பு வெளியிட்ட இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியானது. இதைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் நீ ஜாலியா இருக்க… நான் மட்டும் தனியா இருக்கேன் என எஸ்.டி.ஆர். முன்னாள் காதலி நயனை தான் பேசுகிறாரோ? என சந்தேகத்தை கிளப்பு வருகின்றனர்.
சிம்பு தன்னுடைய திருமண ஆசை குறித்து செல்ல நாயுடன் உரையாடும் கலகலப்பான வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், “எனக்கு ஒரு பொண்ணு பாரு. நீ ஒரு பொண்ணு. இனி தான் நீ ஒரு பையனை மீட் பண்ணனும் . அந்த பையனோட உனக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்கணும். அதுக்கு எனக்கு முதலில் கல்யாணம் நடக்கணும். நான் மட்டும் தனியா இருக்கேன். நீ மட்டும் ஜாலியா இருக்குறது நியாயம் இல்ல. அதனால் நீ செய்ய வேண்டியதெல்லாம், இரவு முழுவதும் அமர்ந்து எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்போது தான் உனக்கு நடக்க வேண்டியதும் நடக்கும். என் கஷ்டம் உனக்கு புரியுதா? என செல்லமாக கொஞ்சி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram