Newskadai.com
தமிழ்நாடு

குப்பைத் தொட்டியில் வெள்ளிக் கிரீடம் : தூய்மை பணியாளரின் நேர்மை..!!!

Share this:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி உள்ள குப்பை தொட்டிக்குள் சாமிக்கு அணிவிக்கும் வெள்ளி கிரீடம் ஒன்றை கண்டெடுத்துள்ளார் தூய்மை பணியாளர். குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் சித்ரா என்பவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குத்தாலம் பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருவபர். வழக்கம்போல் பணிக்குச் சென்ற சித்ரா குத்தாலம் பஞ்சுகார செட்டித் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் தூய்மை பணியை மேற்கொண்டு இருக்கிறார். அப்போது குப்பைத் தொட்டிக்குள் வெள்ளி கிரீடம் இருப்பதை கண்டு எடுத்துள்ளார்.

அது சாமி தலையில் அணிவிக்கும் கிரீடம் என்பதை உணர்ந்த அவர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் அந்த கிரீடத்தை காட்டி விசாரித்துள்ளார். விவரங்கள் தெரிந்தவர்கள் அந்த கிரீடம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். இதையறிந்த சித்ரா ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகி முத்துக்குமரனிடம் ஒப்படைத்தார். இது குறித்து கோவில் நிர்வாகி முத்துக்குமரன், கோவிலில் உள்ள சாமி கழுத்தில் உள்ள மாலைகளை சுத்தம் செய்து குப்பைத் தொட்டியில் போடும்போது கவனக் குறைவாக கிரீடமும் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த நேர்மையான செயலை செய்த தூய்மை பணியாளர் சித்ராவிற்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரித்த கடன் தொல்லை… செல்போன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை…!

THAVAMANI NATARAJAN

கோடிக்கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம்… சிக்கிய அதிகாரி..!!

MANIMARAN M

ரத்து செய்யப்பட்டது ஏலம் : செத்து மிதந்தது மீன்கள் – நாகூரில் பரபரப்பு…

MANIMARAN M

எச்சில் துப்பினால் ரூ.500; மாஸ்க் போடாவிட்டால் ரூ.200… சாட்டையை சுழற்றும் தமிழக அரசு…!!

MANIMARAN M

மக்களே உஷார்: இந்த 5 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகிறது கனமழை…!!

THAVAMANI NATARAJAN

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M