Newskadai.com
தேர்டு ஐ

சிறுகதை : உயிர் தண்ணி

Short Story Uyir Thanni
Share this:

மழை சோவென பெய்ந்து கசகசன்னு இருக்குதுஎப்பா ராத்திரி 3 மணிக்கு ஆரம்பிச்ச மழைடி இப்பாதான் விட்டிருக்கு இப்படியே பேச்சிருந்தா நாமஎல்லா எங்கடி பேரது வெலிகாட்டுக்கு. இதுதான் நம்ம நவீன பாத்ரூம்முன்னு இளம் பெண்கள் சொல்லி சிரித்து கொண்டு போனார்கள், எப்போதும் பெண்களின் சிரிப்பொலி கேட்கின்றபோது எழுந்துகொள்வான் டும்மு டும்மு. நிஜ பெயா் என்னவோ சமாதானம் ஆனா ஊர்ல எல்லாரும் டும்மு டும்முன்னுதான் கூப்புடுவாங்க.

டும்மு எழுந்து வெளியில் வந்து பார்த்தான், தரையெல்லாம் அப்படியே கச கசவென இருந்தது பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவன் வீட்டுப்பக்கம்தான் மலம் கழிக்க வருவார்கள், மழை பெய்ந்து நின்னதால காத்து வாக்கல ஒரே பிய்நாத்தமா அடித்துகொண்டிருந்தது, இருந்தும் சமாதானத்துக்கு இதுவெல்லாம் தெரியாது ஏன்னா அவன் செய்யுற தொழிலே பிய் அள்ளுவதுதானே.

Short Story Uyir Thanni

அவன் எப்பவும்  எல்லார் வயித்தலையும் பிய் இருக்கு, சாதி பாத்தா வருது. ஒசந்த சாதிகாரங்களுக்கு ஒரு மாதிரி பிய்யும், எங்களமாறி ஏழை மக்களுக்கு ஒருமாதிரி பிய்யும் வருதுன்னு நினைச்சிக்குவான். இவன் சின்ன வயசா இருக்கும் போது அவங்க அம்மா காசியம்மாதான் ஊர்ல மலம் அள்ளிட்டிருந்தாங்க அப்ப எல்லா வுட்டுகாரங்களும் காசியம்மா இங்க வந்து அள்ளு, அங்க வந்து அள்ளுன்னுட்டு பண்டவபாடி வந்தா வுட்டுக்கு அஞ்சி, பத்துன்னுட்டு சேத்து குடுப்பாங்க.

டும்மு நினைச்சான் நாம கவுா்மண்ட் வேலைக்கு போனா நம்மள இங்க வந்து  அள்ளு அங்க வந்து அள்ளுன்னு சொல்ல மாட்டாங்கன்னு. காசியம்மா செத்துபோன பிறகு அந்த ஊர்லே வேலைக்கு சேந்தான். சேந்த நாள்ள இருந்து  அர காக்கி டவுர், காக்கி சொக்காவும் போட்டுகின்னு அந்த வீதிகள்ல ஜோரா நடப்பான்.

சமாதானத்துக்கு ருக்குவ கட்டிவச்சாங்க அவளும் சமாதானத்துகூட வாழ்ந்து எட்டு புள்ளகள மகராசிய செத்துபோய்ட்டா. பொண்ட்டாட்டி செத்த பிறகு  மகன் வீட்லதான் சாப்பாடு. நாலு பசங்க நாலு பொன்னுங்கன்னுட்டு பெத்து வளத்து  எல்லா புள்ளையும் படிக்க வச்சான். அவங்க கவுா்மண்ட் உத்தியோம் வாங்கிட்டு அவங்க அவங்க வீட்ட வாசல கட்டிகின்னு செட்லாகிட்டாங்க பெரியவன் மட்டும் அப்பன் செய்ற தொழில செயலான்னு தினமும் குடிச்சிட்டு வருவான்  இப்ப ரயில்வே ஸ்டேசன்ல டெம்பா்வறியா  மலம் அள்றவங்கள பாத்துகிற மேஸ்திரியா இருக்கான், அதனால சமாதானம் வாங்குற மாச சம்பளத்த  குடுத்துட்டு அங்கதான் கால்வயித்து கஞ்சி குடுச்சிட்டு இருக்கான்.

பேர புள்ள கண்ணாடியை போட்டு உடைச்சிட்டான்  மருமக உமா திட்டியின இருந்தா அதுக்கு சமாதானம் புள்ளங்க கால் மேல பிய் போணுட்டா அத அறுத்து போட்டுடவா முடியும் குழந்தையை திட்டாதம்மான்னு மருமகளுக்கு சொன்னான்.  மருமகள பாத்து எம்மா எதாவது வயித்துக்கு குடும்மான்னு பஞ்சாயத்து ஆபிசில கூப்பிட்டிருக்காங்க போகனும்ன்னு சொன்னான். வார்றது பிய் இது ஜம்பம்வேற ன்னு ஒரு கத்து கத்தினால் உமா. சாமாதானம் சத்தமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான்.

இந்த ஆளு பிய் வாறதுக்கு எங்களை எல்லாம் பிய் வாறிவுட்டாரு பிய்வாறிவுட்டாருன்னு அசிங்க படுத்துறாங்க எதுக்குத்தான் இந்த வேலையை விடாம செஞ்சிட்டு திறியறான்னு தெரியல இவா் புள்ளிங்க எல்லாம் நல்ல வேலையிலதான் இருக்குறாங்க இவரு மட்டும் இந்த வேலையை செஞ்சிட்டுட்டு ச்சின்னு துப்பினாள் ஓக் ஓக் என வாந்தி எடுப்பதை போல ஜாடை காட்டினாள் நமக்கு எல்லாம் இத பத்தி பேசினாலே வாந்தி வருதே இந்த கிழவன் எப்படித்தான் செய்யறானோ தெரியலன்னு முடித்தாள் சின்ன மருமகள்.

Short Story Uyir Thanni

தலைவரு வரச்சொன்னாருன்னுட்டு   பஞ்சாய்த்து கிளா்க்கு வந்தான். பி. டி. ஓ வராங்கலாம் அங்க சாக்கடை அடைச்சிகிச்சாம் அத சுத்தம் பண்ணனுமா வரியான்னு சொல்லி கூட்டின்னு போனான் வயசான காலத்துல பாவம் சாப்பாடு கூட இல்லாம போய்  ஒத்த ஆளா மொத்த பிய்யயும் அள்ள வுட்டுட்டாங்க பொழுதினிக்கும் பிய் அள்ளனதல பாவம் தண்ணி தளுப்பு இல்லாம  பிய்மேலேயே விழுந்து முகம் அதல புதஞ்சிருச்சி யாரும் கிட்ட கூட வரல, யாரவது உதவ போனாலும் ஒரே பிய் நாத்தம் அதனால யாரும் கூட கிட்ட போகமுடியல எல்லாம் மூக்க பொத்திக்கின்னு ஆம்புலன்சுக்கு போன் பண்ணறா,

ஆம்புலன்சுக்கு போன் பண்றான்னு தூர போய்ட்டாங்க. இத்தன புள்ளங்கள பெத்து பாவம் உயிர் பிரியும்போது யாரும் தண்ணி ஊத்தல அந்த ஊர் மக்கள் மூத்தரம் பிய்ய கை போட்டு அள்ளி இருக்கான் யாரும் ஒரு வா தண்ணி குடுக்கல ஒரு ரண்டு பேரு மட்டும் வந்து துணியை மூக்குல கட்டிக்கின்னு பிய்யல பொதையுண்ட சமாதானத்த இழுத்து வெயில போட்டு போனாங்க சமாதானம் பிய் குவியல் பக்கத்துலே சவமா கிடந்தான் நாணுட்டு செத்தாலும் போணுட்டு போனவங்க நன்றி கெட்டவங்களாதான் இருக்காங்க…

முனைவர்.ஆதன் குமார்


Share this:

Related posts

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

SCRIPT & ACTING : இணையவழி ’பிரதி மற்றும் நடிப்பு’ கருத்தரங்கம்…

NEWSKADAI

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

NEWSKADAI

குறைந்த விலையில் Smart Phone இத்தனை சிறப்புகள் அம்சங்களா? விரைவில் வெளியாகும்…

THAVAMANI NATARAJAN

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

MANIMARAN M

நண்பனை வைத்து இன்னொரு நண்பனை காலி செய்த பிஜேபி… – பீகார் தேர்தல் தந்திரம்..!!!

POONKUZHALI