Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சிறுகதை : நேற்று சாரதா இன்று ரோஜா – ஆதன் குமார்

Short Story Netru roja intru saradha
Share this:

போனபோடு போட்ரா போன அந்த ஐநா சபைக்கு, எங்கள மட்டும் ஏன்ட இந்த சாமி இப்படி படைச்சான்ன ஐ.நா சபையில கேக்கனும் அங்குத்தி தள்ளாடிய நிலையில் லுங்கி உருவதுகூட தெரியாமல் அப்படியே திண்னையில் சாய்ந்தான்.  வாயிலிருந்து எச்சியை மேலே முய்கின்றான் தன்னுடைய முத்திலேயே விழுகின்றது ரோஜாவுக்கு இது புதுசு இல்ல வழக்கம்போல காய்ந்த கறிகளை துண்டாக்கி மாவுடன் போட்டு பிசைந்து கொண்டு இருந்தாள்.

சாய்ந்திரம் கடையை தள்ளிகினு போகனும் விபாரத்த பாக்கனும்ன்னு வேலையை செய்துகொண்டிருகிறாள். வண்டி தள்ளினுவருான்னு நினைச்சா ஆனா அங்குத்தி மல்லாந்து படுத்துகிடக்கிறான் என்ன எலவு இது என்று உள்ளுர நினைத்துகொண்டாள் இருந்தும் தனக்கு தொழில்தான் முக்கியம் சந்து பொந்துகளக்கூட செட்டியார் கடை இருக்கும் முதலியார் கடை இருக்கும் அவங்கள்ளலாம் வணிகம்  செய்யறாங்க வயிறு வத்தாமா சாப்பிறாங்க நமக்கு வாச்சது இவ்வளவுதான். அங்குத்தி ரோஜாவுக்கு இரண்டாவது புருசதானே,  புருசன விட்டுட்டு அங்குத்தியை சேத்துகினா  புருசனுக்கு ஒரு பெண் குழந்தையோடுதான் வந்தா எந்த சாதி என்ன ஆளுங்கன்னு கூட கேக்கமாதான் அங்குத்தி ரோஜாவை சேத்துகினான்.

Short Story Netru roja intru saradha

நாங்களும் அந்த சாமிக்கு மொட்ட அடிக்கிறம். கெட வெட்றம், நோ்த்தி கடன கடன் உடன் வாங்க தவறாம செய்யுறம் மளிகை கடை, நகைகடை, டிப்பார்மண்டல்டோர், பெட்ரோல்பங்க், அரிசி மண்டி,ன்னு அவங்கதானே வச்சினுகிறாங்க நாங்க என்னத்த பண்றது. எங்ககிட்ட ஒருநாள், இல்ல ஒருமாசம், ஒரு வருசம் எங்க தள்ளுவண்டியை தள்ளினினு நாங்க செய்யுற தொழில அவங்களும், அவங்க செய்யுற தொழில நாங்களும் செஞ்சா நல்லாதானே இருக்கும்.

யாரு கேக்குறா காலம்புறாம் நாங்களே இத செய்ய வேண்டி இருக்கு இந்த சாமியும் பாத்துட்டுதான் இருக்கு எங்க குமிடிக்கியில என்ன குறையோ என்னமோ தெரியுல காலம்புறாம் கஸ்டப்படுறம், வாழ்க்கை மாறமாட்டுன்னுதுன்னு சொல்லிக்கொண்டு நாலு சங்கரமும் சரியா இருக்கான்னு சுத்தமுத்த பாத்தா அந்த வண்டியில கோணலுமானலாக ரோஜா பீப் கடையின்னு எப்வவோ எழுதினது அத பாக்கும்போது யார்கிட்டையும் கையேந்தாமா தனக்கான ஒரு தொழில் இருக்கு  அதுக்கு நான் ஓனா் என்று உள்ளுர நினைத்து கொள்ளுவாள்.

ரோட்ரோத்தல அஞ்சு மணிக்கெல்லாம் கடையைபோடனும் அப்பத்தான் மசால தடவிய கறியை விக்கமுடியும் பத்து ருபா சேத்த சம்பாரிக்க முடியும் என்று நினைத்து கொண்டு வானால எடுத்து வச்சா காகிதங்களை கிழிச்சி வச்சிகினா கஸ்டமருங்க பிளாஸ்டிக் தட்டு கேட்டாங்க ஆனா வாங்க முடியல தன் மகளின் கல்யாண செலவுக்காக போஸ்டு ஆபிசில தங்கமகள் திட்டத்தில மாசம் குடும்ப செலவு போக கொஞ்ச சேத்து வைக்கிறா அதனாலதான் அவளால பிளாஸ்டிக் தட்டுகூட வாங்க முடியல சில நேரத்துல இப்படியும் நினைப்பா நல்லா படிக்கிறா சாரதா ஆனா படிக்கிற இடத்திலேயே யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணிக்கவாலன்னு நினைச்சதுண்டு

இருந்தாலும் அப்படி நடந்தாதான் என்ன நாமத்தான் இப்படி கஸ்டபட்றம் நம்ம புள்ளயாவது நடுத்தெருவுல நிக்காம நல்லா வாழட்டுமேன்னு  கடை போட்டு வானால அடுப்புள வச்சி எண்ணயில காய்ஞ்சி கறியை வறுத்தால்னா சும்மா வாசன தூக்கும், நாக்குல எச்சில் ஊரும் அந்த சுவைக்காக மக்கள் கூட்டம் வந்துடும் கடையை போட்ட வுடனே கால் கிலோ கறின்னு ஆா்டவு வந்துச்சி,  பாக்கறத்துக்கு பெரிய வீட்டு புள்ளங்கமாறி தெரியுது.

ஆண்டி இன்னு அர கிலோ கொடுங்கன்னு வாங்கி திண்ண ஆரம்பிச்சாங்க அவங்க நாக்குக்கு கறி ருசியா இருந்தாலும் கண்ணுக்கு ரோஜா அவையங்கள் அங்க அங்க தெரியரது பாத்து ருசிகிறாங்க, அப்படி ஒரு அழகு ரோஜா நிறையே பேர் ரோஜா கடைக்குத்தான் வருவாங்க மூட்ட சுமக்குறவங்க கைதொழில் செய்யுறவங்கன்னு வந்து சாப்புடுவாங்க ஒரு நாளைக்கு நாலு கிலோ ஓட்டுடுவா  ஏன்னா வாய்யும் ருசியா இருக்கும் அப்படியே  எல்லா கண்ணும் ரோஜாவ அங்க இங்க பாக்க அது இலவசம்தானே அதுக்காகத்தான். அப்படி ஒரு கூட்டம் அந்த ஸ்டால்ல

ரோட்டுல போறவங்க அந்த கடையின் வாசத்த திரும்பி பாக்காம போகமுடியாது அந்த இருட்டு நேரத்தில மண்னென்ன விளக்குல கறியும் மின்னும்  ரோஜா முகமும் மினமினுன்ன தெரியும் அதனால ஏசி கார்ல போரவங்ககூட இறங்கிவந்து கொஞ்சம் சாப்பிட்டுபோலான்னு நினைக்கிற அளவுக்கு இருக்கும் எந்த எண்ணையில கறியை வறுக்கறான்னு தெரியல அப்படி வாசனை அடிக்கும் என்னத்தான் மந்திரம் பண்றாலோ கை பக்குவம்ன்னு சொல்லுவாங்க ரோஜாவ.

வழக்கம்போல அங்குத்தி காலையில எழுந்து கட்சி ஆபீசுக்கு போய்டுவாரு எப்பவுமே நாட்டு நடப்புன்னு பேசிகிட்டு இருப்பாரு சிகப்பு கற வச்சி வேட்டிதான் கட்டுவாரு கொள்கை ரீதியா கட்சியில பேசக்கூடியங்கள இவரும் ஒருத்தா் எப்படியாவது ஐ.நா சபையில பேசிடுன்னு நினைப்பாரு. அதனாலயே அவர கட்சி தோழா்கள் எல்லாம்  ஐ.நா சபையில பேசர தோழா்ன்னு அவருக்கு பேரு. கட்சிகாரங்க அப்படித்தான் கூப்புடுவாங்க.

சராதா காலேஜ்ல நல்ல படிக்ககூடிய பொண்ணு அவள எப்படியாவது கலெக்டராக்கி பாக்கனுன்னு ஆசை அங்குத்திக்கு ஆனா  வருமானம் இல்ல ஒருத்தியோட வருமானந்தான் என்னத்த செய்ய அங்குத்திக்கு தெரிந்தது எல்லாமே இந்த சமூகம் மாறுனும் சமதா்மம் ஆகனுன்னு சொல்லிட்டு திரிவாறு ஆனா சாய்ந்திரம் ஆனா சமூகம் மாறலன்னிட்டு இவரே மாறிடுவாறு மாறலன்ற கஸ்டத்துக்காக குடுச்சிடுவாறு.

என்னத்த செய்ய கட்சி கொள்கன்னு இருந்தா என்னத்த பண்றதுன்னு இந்த சமூகத்தில நானும் எம்பொண்ணும்  கௌரமா இருக்கிறம்னா அதுக்கு அவா்தான் காரணம் அதனால நேரடியா கேக்கமுடியாது ரோஜாவால

இந்த கடபக்கம் வந்து கூடமாட ஒத்தாச செஞ்சா இன்னுங்கூட ரண்டு கிலோ கறி ஓட்டிடலாம் என்னத்த பண்ண அடுத்த மாசம் மார்கழி வேற வருது வியாபாரம் ரொம்ப கம்மியாதானே இருக்கும் அதான் இந்த மனுசன வந்து கொஞ்சம் கறி வறுத்து கொடுத்த பத்துரூபா சேத்து பாக்கலாம், தினத்துக்கும் சாராயத்துக்கு மட்டும் காசு வேணும்ன்னு சொல்றாரு.

ஆம அவருக்கு இந்த பொட்டபுள்ள பொறந்து இருந்தாதானே பாசத்தோடு காசு சேப்பாரு யாருக்கோ பொறந்துதுதானேன்னு நினைக்கிறாருபோல. அங்குத்தி சராதாவை நினைத்து பெரிய கனவே வச்சி இருக்காரு மூனு வருசம் டிகிரி முடிச்சவுடனே மெட்ராஸ்ல கோச்சி கிளாஸ்வுட்டு இந்த மாவட்டத்துக்கே ஆட்சி தலைவரா ஆக்கிலாம்னு ஆசை மனசுக்குள் எப்போதுமே இருக்கும் அங்குத்திக்கு

சாரதா வாழுற இடம் பாவம் செஞ்சவங்க இருக்கிற இடம்போல இருக்கும் வயசுக்கு வந்தபுள்ள குழிக்க இடம் இல்லாம ட்ரைனேஜ்மேல கட்டுன வீடு அந்த ட்ரைனேஜி மேல பாத்ரூம் வெறும் ஓலத்தான் கட்டியிருக்கும். கொசுபேக்டரின்னுதான் சொல்லனும் அந்த அளவுக்கு அந்த சாக்கடையில ரம்பி கிடக்கும் குப்பையும் சாக்கடை தண்ணியும். கனவு மட்டும்தான் இருக்கு ஆனா அதுகேத்த வாழிடம் இல்லை அந்த பொண்ணு என்ன பண்ணும் பாவம்.

ஒரு கட்டதில ரோஜாவுக்கு சொல்ல முடியாத நோய் வந்துடுது அவளலா முன்னபோல, வண்டி தள்ள முடியல கறி எடுத்துனுவந்து கடையை போட முடியல பாவம் என்ன செய்வா வயசாயிடுச்சி இப்பத்தான் சாரதா டிகிரியை முடிச்சா ஆனா வருமானம் இல்ல அங்குத்தி நினச்சமாறி கலெக்டருக்கு படிக்க முடியல அதா அம்மா கடை வச்சிருந்த இடத்திலேயே சாக்னா கடையை வச்சிக்னா. சாரதா சாக்னாக்கடை ஆயிடுச்சு யார சொல்லியும் குற இல்ல நடக்கவேண்டியது நடந்துதானே ஆகுது அங்குத்தி கண்ட கனவு சமூகம் மாறனுன்னு நினைச்சது ஆனா அவா் இருக்கும்போதே ரோஜா பீப் ஸ்டால் சாரதா சாக்னாக கடை ஆனதுதான்.


Share this:

Related posts

அப்படி என்ன தான் இருக்கு கும்பகோணத்தில் வாங்க பார்க்கலாம்…!!

AMARA

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

வாயை விட்டு மாட்டிக்காதீங்க, பொண்டாட்டி பேச்ச கொஞ்சமாவது கேளுங்க… தெறிக்கவிடும் இன்றைய ராசி பலன்கள்…!!

THAVAMANI NATARAJAN

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

NEWSKADAI

வாடிக்கையாளர்களுக்கு ஆப்புவைத்த ஏர்டெல்… தாறுமாறாக எகிறப்போகும் கட்டணங்கள்…!!

MANIMARAN M