Newskadai.com
தேர்டு ஐ

சிறுகதை : “டாஸ்மாக் ஞானம்”..!?

Tasmac Philosophy
Share this:

காலையில் 5:37 மணிக்கு எல்லாம் விழித்து கொண்டேன் அப்போது திருவிழாக் கோலம். வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதால் அதிகாலையிலேயே எழுப்பி விட்டாங்க அம்மா. எழுந்து பார்த்தேன் வீட்டு வாசல் பச்சை பசேல் என்ற நிறம் தெரிந்தது. இத்தனை நாளாக புழுதியும் மண்ணுமாக இருந்த வாசல் இன்று புதிதாக பச்சை ஆடை அணிந்தது போல் கண்களுக்கு புலப்பட்டன. பிறகு வெளியில் வந்து நின்று கொண்டிருந்தேன். கொட்டாய் விட்டப்படி இருந்த என்னை பூளைக் கண்களோடு முகம் கழுவாம வீதியில வந்து நின்னுக்கீறான் பாரு என்று சொல்லிக் கொண்டே என் அருகில் வந்தால் அத்தை. எல்லோரும் பரப்பரப்புடன் இயங்கி கொண்டிருந்தார்கள்.

(திருவிழாக் காலம் என்பதால்) காலையிலேயே கொஞ்சம் பணத்தை சுதாரித்துக் கொண்டு ஒயின் ஷசாப்புக்கு சென்று விட்டேன். திடீரென்று மக்கள் கூட்டம் அலை மோதியது. நான் திகைத்து போனேன் என்னடா இச்சிறிய கிராமத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதுகிறார்கள் என்றைக்கும் இல்லாதது போல் இன்று இவ்வளவு கூட்டம் என்று என் மனதில் நினைத்து கொண்டேன். அச்செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்…

Boom boom Maadu

”கடையில சரக்கு காலியாம் ரோட்டுக்கு போயி மறியல் செய்யுனும்டா” என்ற குரல் கேட்க தொடங்கின. நான் நினைத்து கொண்டேன் இதக்கெல்லாம் கூட ஸ்டிரைக் பண்ணுவாங்க. நாடு போற போக்க பாத்தியா? என்னுடைய மைன்டு வாய்ஸ் கேட்ட ஒரு குடிமகன் சொன்னா, ”இல்லையா பின்ன இன்னைக்கு என்ன நாள் வருஷத்துல ஒரு நாள் சந்தோஷமாக இருக்கலாம்னு கடைக்கு வந்தா சரக்கு இல்லனு சொல்றான். இதையெல்லாம் இப்படி விட்டா நாட்டுக்கு எப்படி வருமானம் வரும் சொல்லுப்பா பார்க்கலாம்.”

நாட்டைப் பத்தி எவன் கவல படுறதுனு வெவஸ்த இல்ல. இவன் நல்ல குடிமகன் தான்னு நினச்சிக்குனு நானும் அவர்களோடு முட்டி மோதிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அந்த வியர்வை நாத்தம், குசு யாரோ ஒத்த உட்டுட்டா ஒரே நாத்தம், அது மட்டுமா யாரோ ஒருத்தம் அந்த கூட்டம் நெரிசல் தாங்க முடியாமா வாந்தி எடுத்துப்புட்டா கறி சாப்பிட்டிருப்பா போல அது குடல புடுங்குது. இந்த பக்கம் ஒரு பெரியவரு பீடி புடிச்சிக்கிட்டு புகையை வுட்டனு இருந்தாரு. தம்பி எனக்கு 80 ரூபா மானிட்டர் கோட்டர் வாங்குப்பா என்று குரல் கேட்குது வேற. கூட்டம் அதிகமாக போலீஸ்காரங்க வந்து கட்டுப்படுத்தினாங்க சரக்கு வாங்கிட்டு ஒரு இடத்துல குடிக்க ஆரம்பித்தேன்.

Tasmac

அப்போது பள்ளி மாணவர்கள் வந்தார்கள் அவங்க போட்டு இருந்த டீ-சர்ட்ல ஒரே மாதிரியான சினிமா நடிகர் படம் போட்டு இருந்துச்சு. அந்த குரூப்க்கு பேரு என்ன தெரியுமா வச்சிருந்தாங்க் டேன்ஞர் பாய்ஸ்-னு இருந்துச்சு. என்ன பாத்து கேட்டாங்க ”என்னண்ண ஒரு கோட்டர் போதுமா கேட்டாங்க. இன்னொரு பீர் வேணும்னா சொல்லுங்கண்ண” என்று சொன்னாங்க நானும் ”தாமாஸ்க்கு ஒன்னு வாங்கி கொடுங்கப்பா” என்று சொன்னேன். பேசிக் கொண்டே இருந்த போது செல்போன் ரிங் வந்துச்சு. ஒரு கட்டிங் உர்றுனு ஒரு இலுப்பு இழுத்தேன். பிறகு வீட்ல கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினாங்கலேனு யோசன வந்துச்சு. அந்த காசுல ஒரு கிலோ ஆட்டுக்கறி எடுத்துனு வரச் சொன்னாங்க. அந்த காசுல தான் சரக்கு சாப்பிட்டோம் செலவாயிடுச்சேனு நினச்சேன் அதனால என்ன கறியெல்லாம் ஒன்னு தான நினச்சி ஒரு கிலோ மாட்டுக்கறி எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணேன்.

Tasmac 2

அதுல மீத ஒரு காசுக்கு ஒரு கட்டிங் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த பாரில் சலசலப்பு ஏற்பட்டது திரும்பி பார்த்து என்னன்னு கேட்ட. முன் விரோத காரணமாக பத்து பேரு சேர்ந்து ஒருத்தர அடிக்கிறாங்கப்பா என்ற சொன்னாங்க. எனக்கு லைட்டா கிர்னு இருந்துச்சு சுத்திப்பாத்தா நம்ம ஆளுங்க இருக்கிறாங்களானு நோட்டம் விட்டேன். எனக்கு தெரிந்த சார் ஒத்தரு அங்கு நின்னு இருந்தாரு அவர பாத்தவுடனே எனக்கு சந்தோஷம் வந்துடுச்சு. அவர் கிட்ட ”என்ன சார் அநியாயம் நடக்குது” என்று கேட்டதற்கு

“இதெல்லாம் போலிஸ் கேசு வந்தமா சரக்கு போட்டமா சைடிஸ் சாப்பிடமானு தலைய கீழ போட்டுன்னு போறது தான் நல்லது”. அதக்கேட்டவுடனே எனக்கு பயங்கற டென்சன் ஆகிடுச்சு அதெப்படி அப்படியே உடறது இத ஒரு கையி பார்க்கனும்னு நினச்சி மீண்டும் இருந்த கறி காச மறுபடியும் ஒரு கோட்டர வாங்கிட்டு சாப்பிட ஆரம்பிச்ச சும்மா வுர்னு போத ஏறுச்சு. அந்த கையோடு பக்கத்து பெட்டிக் கடைக்கு ஒரு சிகரெட்டு வாங்கலாம்னு போனேன்.

அங்கு பருத்த உடல் மினுமினுப்பான உதடு பார்க்கிறதற்கு சும்மா நாட்டுக்கட்டையா இருந்துச்சு அத ஒரு கிக்கான பார்வையா பாத்தேன். அவளும் என் மேல உள்ள மரியாதையில ”வாங்க சார் என்ன வேணும்னு” கேட்டா. நான் ”கிடைக்குமா” கேட்டேன். ”என்ன சார்”-னு மறுபடியும் கேட்டா. ”ஒரு சிகரெட் கிடைக்குமானு” சொன்ன. (அதுக்கு அர்த்தம் நம்ம ஊரில் அந்தரங்கத்திற்காக) அது ஒரு மாதிரியான நாசுக்கான வார்த்தை. சொல்லி எப்படியோ சமாளித்துக் கொண்டு மீதம் இருந்த சில்லறையை பாக்கிட்ல இருந்து எடுக்கப்பாத்தேன். கீழே விழுந்துச்சு, என்னாலா எடுக்க முடியல உடம்பு தள்ளாடுது நிக்க முடியல இதைக் கண்ட அந்த பெண் வெளிய வந்து எடுக்க பாத்தா.

Liquor TamilNadu Tasmac

அப்ப தான் தெரிஞ்சிச்சு அவள் ஒரு மாற்றுத்திறனாளினு உணர்ந்தேன். என் மனம் குற்ற உணர்ச்சியில் கூனி குருங்கியது. குடிச்ச அத்தன போதையும் தெளிஞ்சிடுச்சு.

ஊனமா இருந்தா கூட தான் சுய சம்பாரனையல வாழனும் என்று வைராக்கியத்துல இருக்கும் அந்த பெண்ண கேவலமா எண்ணி விட்டோமே என என் மனம் உருத்துக்கிட்டே இருந்துச்சு. நாம வீட்ல கொடுத்த பணத்த ஊதாரித்தனமாக மதுவுக்காக வீண் செலவும் செய்துட்டோம் என்ற எண்ண ஓட்டத்தில் அங்கிருந்து நகர்ந்து வந்தேன். வாழ்க்கையில இப்படியும் ஒரு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டு வாழ்க்கை புரிதலை நோக்கி என் பயணம் ஆரம்பமாகிறது.

-முனைவர்.ஆதன் குமார்


Share this:

Related posts

முருகனும் தந்தை பெரியாரும்… தீப்பொறி தீயாய் மாறியது எப்படி…?

NEWSKADAI

ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது… ஆனால் முகேஷ் அம்பானி??

MANIMARAN M

“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

NEWSKADAI

மகனுக்காக மடங்கினாரா ஓ.பி.எஸ்?… திரைமறைவில் எடப்பாடியாருடன் நடத்திய பேரம் சக்சஸ்…!

NEWSKADAI

அன்லாக் 4.O: மக்களை கொரோனாவுடன் மல்லு கட்ட விட்ட மத்திய அரசு…!!

POONKUZHALI

‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன?

NEWSKADAI