Newskadai.com
தேர்டு ஐ

சிறுகதை : நொடி பேய்கள்

short story Nodi Payigal
Share this:

சில நாட்களாகவே கருங்காளிக்கு உள்ளுர வருத்தம் இருந்து வந்தது. எப்போதுமே அவன் கை கடிகாரத்தை பாக்கும்போதுயெல்லாம் எட்டு என முடியும் நேரமாகவே இருந்தது. சில காலம் மனதை சமாதானப்படுத்தி சென்றாலும் ஒரு சிலநேரத்தில்  நொடி முள்கூட எட்டில் நிற்பதை பார்த்து பயந்தேபோனான், இருந்தும் யாரிடமும் சொல்லாமல் இருந்தது அவனுக்கு மன அவஸ்தையை  கொடுத்தது.

ரோட்டோரோமாக கிளி சோசியம் பார்க்கப்படும் என்று எழுதப்பட்டிருந்த அந்த ஜோசியக்காரனிடம் கையை காட்டினான் கருங்காளி, சோசசியக்காரன் முகத்தை சுளித்தவாரு “தம்பி இனிமேல் கையை யார்க்கிட்டையும் காடட்டாதீங்க ஏன்னா உங்க ராசி அப்படி,“  சொன்னவுடன் சந்தேகப்பட்டது சரியாபோச்சேனு  நினைத்துகொண்டு ஏன் என்று கேட்டான் கருங்காளி. இல்லப்பா நீ பொறந்ததிலிருந்து ஏகப்பட்ட துன்பங்களைத்தானே அனுபவிச்சிருப்பிங்க இப்பவும் அதான் நடந்திருக்கு என்று சொல்லி முடிப்பதற்குள் அடுத்த கேள்வியை கேட்கத்தொட்ங்கினான் கருங்காளி. “இன்னா சொல்றிங்க கொஞ்சம் விவரமாதான் சொல்லுங்களேன்னு சொன்னான்“

short story Nodi Payigal

“தம்பி நான் சுமார் இருபது ஆண்டுகளா சோசியம் சொல்லிட்டு வரன் இப்ப சினிமாவுல இருக்கிறவங்க, அரசியல் பிரமுகா்கன்னு நான் சோசியம் சொல்லி பெரிய ஆளா வந்திருக்காங்க, சிலபோ் காணாம போயிருக்காங்க நா வாங்குற இந்த காசு தக்கனும் தம்பி உண்மையைத்தான் சொல்லுவேன் எனக்குள்ள ஆத்தா ஜக்கம்மா இருக்கான்னு ஒரு போடுபோட்டான் சோசியக்காரன்.

யாரு பெரிய ஆள ஆனாங்க யாரு காணாம போனாங்கன்னு மனதிற்கு கேட்க நினைத்து எதுக்கு வம்பு என்று அதை விடுத்து மேல சொல்லுங்கன்னு சொன்னான் அதற்குள் தன் பாக்கிட்டிலிருந்து அழைப்பு ஒலி வந்து எடுத்து பார்த்தான் தன் மனைவி நாசி அழைத்தாள் ”என்னமா என்று கேட்டதற்கு முன்னமே “வரும்போது கொஞ்சம் பருப்பும் கொழந்தைக்கு பாலும் வாங்கிட்டு வாங்க  சொல்லி முடித்தால், ஜோபியில் துலாவி பார்த்தான் நூறு மட்டும்தான் இருந்தது சரி பார்த்துக்கோவோம்ன்னு மேல சொல்லுங்கன்னு சொல்ல ஆரம்பித்தான். சோசியம், சொல்ல ஆரம்பிக்கும்போதே மீண்டும் அழைப்பு மணி அடித்தது தம்பி சோசியம் சொல்லட்டும்மா இல்ல அப்புறம் வரியா என்று எரிச்சலோடு சொன்னான்.

short story Nodi Payigal

“என்னாடா கருங்காளி வட்டிக்கு காச வாங்கி துன்னுட்டு இப்ப நம்மளுக்கே டிமிக்கி குடுக்கிரையா ங்கோத்தா வரேன் இரு ஊடுதூந்து உதைக்கிறன்ன்னு சொன்னான் கந்து வட்டிக்காரன் மீண்டும் சோசியரண்னே சொல்லுங்கன்னு சொல்வதற்கு முன்னமே அழைப்பு மணி அடித்தது “கொத்தனார் வேலைக்கு ஆள் கூட்டின்னு வரன்னிட்டு காச வாங்கனியே வரவே இல்லன்னு சூப்பர்வைசா் சொல்லி முடித்தார்.

மீண்டும் சோசியம் பாக்கலான்னு நினைச்சான் இப்ப சோசியக்காரன் நாதான் தம்பி சொன்னனே நீங்க படாதபாடு படுவிங்கன்னு நான் பொய்சொன்னது கிடையதப்பா ஏன்னா இது ஏழரை சனி உன்னை பிடிச்சிட்டு ஆட்டுது அதான் இந்த பொழப்புன்னு சொல்லி தன் கையிலிருந்த பஞ்சாங்கத்தை புரட்டி எடுத்தான் க.கு.கேன்னு வந்தாலே கும்பராசி உங்களுக்கு ஆட்சி பகவான் சனியேஸ்பரன்தான் அதனால வந்தா ஆயிரம் செலவு வரும் சிரமத்தை கொடுப்பான் ஆனா உயிரோட வைச்சிருப்பான் இதைவிட ஒன்னும் இல்லத்தம்பின்னு சொன்னான் சோசியக்காரன். அப்ப இது எல்லாம் மாறுமான்னு பாத்து சொல்லுங்க அண்ணேன்னு கேட்டான்.

தம்பி நாமா இதலாம் மாத்தமுடியாது  கட்டம் சொல்றததான் நான் சொல்றன் அதுக்கு ஒரு தாயத்து வேணும்ன்னா கட்டலாம் அதுக்கு ஒரு 75 ரூபா ஆகும் சோசியத்துக்கு ஒரு 25 ரூபா மொத்தமா ஒரு 100 ரூபாயை கொடுக்கனும்.

short story Nodi Payigal

“அண்ணே கேக்றேன்னு தப்பா நினைச்சிகாதிங்க என் ராசிக்கு இந்த ஜென்மத்திலோ அடுத்த ஜென்மத்திலோ நாட்டு முதலமைச்சரா வரமுடியுமான்னு பாத்து சொல்லுங்க அண்ணே” என்று கேட்டான். “தம்பி நீங்க ரொம்பத்தான் ஆசைபடுறீங்க 100 ரூபாயை கொடுத்துட்டு என்ன கேள்வி கேட்டபாருன்னு சொல்லி மலுப்பி சிரித்தான் சோசியகாரன்.

“அப்ப ரண்டாயிரம் வருசமா ஒரு ஜாதியை மட்டும் சனிஸ்பிரன் புடுச்சிகிரானா எப்பவுமே இந்த மக்கள் இப்படித்தான் இருக்கனும்னு நினை்ககிறாபோல“ என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டே சோசியகாரன் கேட்ட பணத்த எடுத்துகொடுத்திட்டு வீட்டுக்கு போணான். அங்க நாசி என்னங்க எங்க பருப்பு, குழந்தைக்கு பால் வாங்கினு வரச்சொன்னனேன்னு கேட்டாள்.

கையில பணம் இல்ல அதான் வந்துட்டன்னு சொன்னான், வழியில ஒரு கடங்காரன் வாங்கிட்டான் சனியபுடிச்ச இந்த கடங்காரனுங்க வாங்கராங்க இந்த சனியபுடுச்சியவங்கிட்ட வந்து நான் மாட்டிகிட்டோம்ன்னு திட்டிகொண்டே கொழந்தை அழுகையை நிறுத்த வெளியே தூக்கிபோனாள் நாசி.

short story Nodi Payigal

இது எல்லாம் எப்பதான் தீரும்னு நினைத்து தன் எதிரிலே இருக்கும் சுவற்றை பார்த்தான் அதில் தந்தை பெரியார் படம் இருந்தது படத்திலேயே “கடவுளை மற“ என்று எழுதிருந்தது இங்கு ஆண்களையும் பெண்களையும் மதம் பிடித்துகொண்டது பெண்களை ஆண்கள் பிடித்து கொண்டார்கள் ஒவ்வொருவரும் விடுபடுவதற்கான காலம் உருவாகிகொண்டிருக்கிறது என்பதை நினைத்து படுத்து உற்ங்கினான் கருங்காளி இரவு 8மணிக்கு.


Share this:

Related posts

உயிர் பலி கேட்கும் நீட் தேர்வு இன்று தொடங்குகிறது…

NEWSKADAI

முருகனும் தந்தை பெரியாரும்… தீப்பொறி தீயாய் மாறியது எப்படி…?

NEWSKADAI

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக தான் மத்திய அரசு புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிவிக்கையை (EIA2020) அவசர அவசரமாகக் கொண்டு வந்ததா???

POONKUZHALI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : சாம வேத சம்கிதை

NEWSKADAI

சிறுகதை : தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்..!!

NEWSKADAI

சிறுகதை : உயிர் தண்ணி

NEWSKADAI