Newskadai.com
சினிமா

என் மகன் சாவுக்கு காரணம் இதுதான்?…. கண்ணீர் விட்டு கதறிய வடிவேல் பாலாஜி அம்மாவின் பகீர் குற்றச்சாட்டு…!!

Share this:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் காமெடி மன்னனாக வலம் வந்த வடிவேல் பாலாஜி. நேற்று உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வடிவேல் பாலாஜி, 4 தனியார் மருத்துவமனைகளில் மாறி, மாறி சிகிச்சை பெற்றுள்ளார்.

இறுதியாக சிகிச்சைக்கு முற்றிலும் பணமில்லாத நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். 45 வயதே ஆன வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, உதய நிதி ஸ்டாலின் மற்றும் விஜய் தொலைக்காட்சி பிரபலங்களான தாடி பாலாஜி, புகழ், தீனா, ரோபோ சங்கர், மணிமேகலை, ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சுமார் 2.30 மணி அளவில் அவரது உடல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, சவப்பெட்டியில் நுங்கம்பாக்கம் இடுகாட்டில் கிறிஸ்துவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுவரை வடிவேல் பாலாஜி சிகிச்சைக்கு பணமின்றி இறந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அவருடைய அம்மா மற்றும் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அதாவது வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது முதலில் 2 நாட்களுக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அவர்கள் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேல் வைத்து சிகிச்சை கொடுத்துள்ளனர். அந்த மருத்துவமனை நிர்வாகம் வடிவேல் பாலாஜி உடல் நிலை குறித்து உண்மையான தகவல்களை கூறாமல், பிசியோதெரபி கொடுத்தால் கை, கால் குணமாகிவிடும் என சொல்லி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த வடிவேல் பாலாஜிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வடிவேல் பாலாஜி உடலில் சிக்கல் இருப்பது தெரிந்தும் அவருடைய குடும்பத்தால் இனி பணம் கட்ட முடியாது என்பதை அறிந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம், பொய்யான தகவல்களைக் கூறி டிஸ்சார்ஸ் செய்ததாக அவருடைய நெருங்கிய நண்பர் குற்றச்சாட்டியுள்ளார்.


Share this:

Related posts

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… திரையுலகை அடுத்தடுத்து தாக்கும் அதிர்ச்சி

THAVAMANI NATARAJAN

“I am a Tamil பேசும் இந்தியன்”… மகனுடன் சேர்ந்து கெத்தாக போஸ் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன்…!!

NEWSKADAI

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M

தளபதி விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்… சோகத்தில் கோலிவுட்

NEWSKADAI

வனிதாவை வாய் கிழிய விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா… கைது செய்த பெண் காவல் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி…!

NEWSKADAI