Newskadai.com
இந்தியா

N-95 மாஸ்க் கொரோனா வைரஸ் பரவலை தடுக்காது… அதிர்ச்சி தகவல்…!!

Share this:

கடந்த மார்ச மாதம் முதலே இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரு கோடியே 15 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 099 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொடூர தொற்றிலிருந்து நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

கொரோனா தொற்றிலிருந்து காக்க இதுவரை எவ்வித தடுப்பு மருந்து வெளியாகாத நிலையில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடித்தலும் மட்டுமே தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள சிறந்த வழியாக பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் முகக்கவசங்கள் அணியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதையடுத்து மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவதை கடைபிடித்து வருகின்றனர்.

 

அதிலும் N-95 எனப்படும் துளையிடப்பட்ட சுவாசக்கருவி பொருத்தப்பட்ட முகக்கவசங்கள் அதிக பாதுகாப்பானது என மக்களால் கருதப்பட்டது. இந்நிலையில் அந்த மாஸ்குகள் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்காது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது N-95 முகக்கவசங்களில் சுவாசிப்பதற்காக துளையிடப்பட்டுள்ளது அதனால் தொற்றை தடுக்க முடியாது என தெரியவந்துள்ளது.

எனவே மூக்கு மற்றும் அதன் துவாரங்களை முழுவதும் மூடக்கூடிய துணியால் ஆன முகக்கவசங்களை பயன்படுத்துவதே சிறந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களை தவிர வேறு யாரும் N-95 மாஸ்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை இல்லை… ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு…

MANIMARAN M

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்??? முடிவு செய்யக் கூடும் காரியக் கமிட்டி…

MANIMARAN M

அயோத்தி பூஜையன்று குரங்குகளுக்கு சிறப்பான கவனிப்பு… உ.பி. முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

NEWSKADAI

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M