Newskadai.com
சினிமா

அடுத்த அதிர்ச்சி… கொரோனாவால் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

RIP
Share this:

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றுக்கு ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்கள் மட்டுமின்றி, முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களில் ஆரம்பித்து கள ஆய்வில் ஈடுபடும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட அதிமுகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திரையுலகைப் பொறுத்தவரை ஷூட்டிங் இல்லாத காரணத்தால் இதுநாள் வரை பல திரைப்பிரபலங்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்தனர். அப்படி இருந்த போது அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராயில் ஆரம்பித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் வரை பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தது கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

2003ம் ஆண்டு கே.பி.ஜெகன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புதிய கீதை, இந்த திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ப்ளோரண்ட் பெரைரா. ஊடகத்துறையில் பல தலைமை பொறுப்புகளில் பணியாற்றியுள்ள இவர், சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக திரைப்படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் கூட தொடரி, கயல், வேலையில்லா பட்டதாரி, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இதுவரை தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: http://6 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை… கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ப்ளோரண்ட் பெரைராவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு ஊடகவியலாளர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

“உன்னத மனிதர் உறங்குகிறார்”.. தந்தையின் மறைவு குறித்து பிரபல நடிகரின் கண்ணீர் பதிவு…!!

THAVAMANI NATARAJAN

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

எப்படியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்?… சற்று முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

NEWSKADAI

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்… செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை…!!

AMARA

‘வடிவேல்’ பாலாஜி குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்… துக்கத்தில் தோள் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

AMARA