Newskadai.com
உலகம்

திடீரென நிறுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி பரிசோதனை… உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆக்ஸ்போர்ட்…!!

corona vaccine
Share this:

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா செனிகா இணைந்து தயாரித்து பரிசோதனை செய்து வரும் கொரோனா தடுப்பு ஊசி மீது உலகமே பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது. இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டது. இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென்னாப்ரிக்கா நாட்டு மக்கள் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வெகு விரைவில் இந்த மருந்து உலகம் முழுக்க மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று உலகத் தலைவர்கள் நம்பி வந்த நிலையில் திடீரென ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனையை நிறுத்தி வைப்பதாக செய்திகள் வந்துள்ளன.

பரிசோதனை தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு விவரிக்க முடியாத உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தி வைக்கப்படுவதாக ஆஸ்ட்ரா செனிகா நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஸ்டாட் நியூஸ் என்ற மருத்துவ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற புற்று நோய் கிருமிகளுக்கு எதிராக பெரிய அளவில் பரிசோதனைகள் நடத்தப்படும் போது ஒரு சிலருக்கு இவ்வாறு உடல்நலக் குறைவு ஏற்படுவது இயல்பு. அதனை தனிப்பட்ட முறையில் மிக கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். பாதிப்புக்கு உள்ளான நபர் வெகு விரைவில் அவர் அதிலிருந்து மீண்டு வருவார் என அந்த இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.


Share this:

Related posts

நண்பர்களிடையே சமரசம்… கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!

MANIMARAN M

குறைந்த விலையில் 95% பயனுள்ள ஸ்பூட்னிக் V கொரோனா தடுப்பூசி..!!! – ரஷ்யா அறிவிப்பு…

MANIMARAN M

மிக குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து… உலகின் முன்னணி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

MANIMARAN M

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI