Newskadai.com
அரசியல்

திமுக பொதுச்செயலாளராகிறார் துரைமுருகன்?… செப்.9-ல் கூடுகிறது திமுக பொதுக்குழு…!

Share this:

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை நம்ம பக்கம் இழுப்பது, கட்சியில் சேர்ந்த திரைப்பிரபலங்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பது என அடுத்தடுத்த வேலைகளில் திமுக, அதிமுக, பாஜக கட்சி தலைமை பிசியாக உள்ளது. அதேபோல் மாவட்ட செயலாளர்கள் நியமனம், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கான நியமனம் ஆகிய பணிகளும் நடைபெற்று வருகிறது.

DMK
 

இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DMK

பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின்றன.


Share this:

Related posts

தமிழக அரசே! பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி..

MANIMARAN M

இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம்?… தொடரும் நீட் தேர்வு தற்கொலையால் தலைவர்கள் கொந்தளிப்பு…!!

AMARA

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

இவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுங்கள்… சட்டமன்றத்தில் அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA