கொரோனா சிகிச்சைக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடிய தனியார் மருத்துவமனைகள் மீதும், கள்ளச்சந்தையில் உயிர்காக்கும் மருந்துகளை விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் படிக்க:http://“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!
தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து கண்டறியப்பட்ட அத்தகைய தனியார் மருத்துவமனைகளுக்கு கொரொனா (COVID-19) நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளிடம் அதிகமாக வசூலிக்கப்பட்ட பணத்தை மருத்துவமனைகள் நோயாளிகளிடம் திருப்பி வழங்குவதற்கு ஆவண செய்யப்படும்.
மேலும் படிக்க:http://மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!
உயிர்காக்கும் மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மருந்து விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டத்திற்குப் புறம்பாக வெளிமாநிலங்களில் இருந்து கடத்திக்கொண்டு வரப்படும் மருந்துகளை கண்டறிய அரசு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, மதுரை, பகுதிகளில் உயிர் காக்கும் மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தேசிய அளவில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. விரைவில் கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்” என்று தெரிவித்தார்.