கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் முடங்கி கிடந்த ரசிகர்கள் எப்போ, எப்போ என எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரோமோஷன் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. எல்லாரும் ஆசைப்பட்டது போலவே மிரட்டு மீசை, சேவ் செய்யாத தாடி என லாக்டவுன் கெட்டப்பில் வந்து அசத்தலாக பேசினார் உலக நாயகன் கமல் ஹாசன்.
அதில் கமல் ஹாசன் வழக்கமாக கண்ணில் கனல் தெறிக்கும் படி பேசியுள்ளார். எவ்வளவு நாளைக்கு தான் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது, அதனால் நம்மை நம்பி இருப்பவர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். உலக சுகாதார மையம் கூறியுள்ள வழிகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருப்போம். இதோ நான் வந்துட்டேன். அதே மாதிரி நீங்களும் வேலையை தொடங்குங்கள் நாமே முன்னேடுப்போம். இதோ நான் வந்துட்டேன். அதே மாதிரி நீங்களும் தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை… நாமே தீர்வு.. சரி வேலையை ஆரம்பிக்கலாமா? என தனது வழக்கமான அரசியலுடன் பேசியிருந்தார்.
மேலும் படிக்க : http://கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புரணி பேசுவதை பார்க்க நிறைய மக்கள் விரும்புறாங்க, அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி காஸ்ட்லியான புரணி பேசும் நிகழ்ச்சி என பங்கமாக கலாய்த்துள்ளார். ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் நெறியாள்கையை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் காத்துக்கிடக்கும் நேரத்தில் சீமான் இப்படி பொசுக்கென சொல்லிட்டாரே என கமல் ரசிகர்கள் பொங்குகிறார்களாம்.