Newskadai.com
அரசியல்

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

Share this:

உலகை உலுக்கிப் போட்டுள்ள கொரோனா பெருந்தொற்று, சாமானியர்களின் வாழ்வாதாரத்தை கபளீகரம் செய்துள்ளது. தொடர்ந்து அமுலில் இருக்கும் பொது முடக்கத்தால் பலர் வேலை இழந்தும், வருமானம் இன்றியும் தவித்து வருகின்றனர். இச்சூழலில், இளைஞர்களையும், மாணவர்களையும் பேராபத்தில் சிக்க வைத்துள்ளது ஆன்லைன் சூதாட்டம்.

சமீபத்தில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையைச் சேர்ந்த 26 வயதுள்ள காவலர் ஆனந்த், மற்றும் கடலூரை சேர்ந்த பொறியாளர் அருள்வேல் என்பவரும் இணையவழி சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடன்சுமையால் தற்கொலை செய்துக் கொண்டனர். இத்தகைய பேராபத்துக்கள் நிறைந்த இணைய வழி சூதாட்ட ரம்மி விளையாட்டிற்கு தடைவிதிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

  • சமூக வலைதளங்கள் உட்பட இணையதளங்கள் மக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவற்றை முறைகேடாகப் பயன்படுத்துவோர் சமூகத்திற்கு ஆபத்தினை ஏற்படுத்துகின்றனர்.

  • இணையவழி ஆன்லைன் சூதாட்டங்கள் தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவின் இளைய தலைமுறையினரின் எதிர்கால நல்வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், பேராபத்தாகவும் மாறிவிட்டது.

  • லாட்டரி உள்ளிட்ட பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்கள் தமிழகத்தில் சட்டப்படி குற்றமென்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிப்படையாகப் பிரபலங்கள் மூலம் தொலைகாட்சி மற்றும் இணையவழியிலும் விளம்பரம் செய்யப்படுகிறது.

  • அறிமுக ஊக்கத்தொகை கொடுத்து இளைஞர்களிடமும், மாணவர்களிடம் குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டுகிறது.

  • முன்னேற்றத்திற்கான இலக்கை நோக்கிய இளைஞர்களின் சிந்தனைகளைச் சிதைக்கின்றது.

  • மன அழுத்தத்திற்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டுகிறது.

  • இணையம் வழி பாலியல் சீண்டல்கள் எவ்வாறு தண்டணைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறதோ, அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்களும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • குழந்தைகள் தொடர்பான ஆபாச இணையதளங்களைத் தடை செய்தது போல் இளைஞர்களை குறிவைக்கும் இதுபோன்ற சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

Share this:

Related posts

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

AMARA

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். – மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்.

NEWSKADAI

“இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை”… பேரவையில் உறுதி அளித்த முதல்வர்…!!

MANIMARAN M

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

ஊரடங்கு நீட்டிப்பா?… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

AMARA

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்??? முடிவு செய்யக் கூடும் காரியக் கமிட்டி…

MANIMARAN M