Newskadai.com
தமிழ்நாடு

வரும் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி

School
Share this:

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை  மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் அதில்  பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக  பாடங்களை நடத்தி வந்தார்கள்.

கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து  வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.  இருப்பினும் இந்தாண்டின் கல்வி முடிவை ” zero academic year “ ஆக அறிவிக்க முடியாது என உயர்கல்வி செயலர் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இதனை அடுத்து  மாநிலத்தின் கொரோனா  தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாநில அரசுகளே  கல்வியாண்டு தொடங்கப்படும் முடிவை எடுத்துக்கொள்ளலாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

Private School

இதை தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க சில கட்டுபாடுகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பள்ளிகளில் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்.

 • பள்ளிகள் திறக்கும் முன்பாக பள்ளியில் அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்ய வேண்டும்.
 • வருகை பதிவை பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக வேறு முறைகளை பின்பற்ற வேண்டும்.
 • பிராத்தனை கூட்டங்கள் வைக்க கூடாது.
 • பள்ளியில் விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கை அனுமதிக்க கூடாது.
 • நீச்சல் குளங்கள் பயன்படுத்த கூடாது.
 • பள்ளியின் நுழைவு வாயிலில் சானிடைசர் மற்றும் உடல் வெட்பநிலை பரிசேதனைகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
 • ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும்.
 • மாணவர்கள்களுக்கான வாகனங்களை நாள்தோரும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
 • வகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவசியம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
 • மாணவர்கள் தங்களுடைய நோட், பேனா, பென்சில் போன்றவற்றை மாற்றி பயன்படுத்த கூடாது.
 • மாணவர்களை 6 மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்புவது கூடாது, அடிக்கடி சோப் அல்லது சானிடைசரை பயன்படுத்தி கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும்.
 • ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டு வருவதை தொடரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது,
 • பெற்றோர் அல்லது காப்பாளரிடம் எழுத்துபூர்வ ஒப்புதல் பெற்று மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும்.
 • 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்கலாம்.
 • கொரோனா கட்டுபாட்டில் உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க கூடாது எனவும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கூறியுள்ளது.

Share this:

Related posts

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI

வாகன ஓட்டிகள் மீது வரியை அள்ளி வீசும் சுங்கச்சாவடிகள்… மறைமுக கட்டணத்தால் மன உளைச்சலில் மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI

5 ஜி காலத்தில் இப்படியொரு சிறுவன்… விவசாயத்தில் புகுந்து விளையாடும் 9 வயது பிரகதீஷ்…!!

MANIMARAN M

பிரபல நகைக்கடையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

MANIMARAN M

குடிபோதையில் கார் ஓட்டிய போக்குவரத்து ஆய்வாளர்… மடக்கி பிடித்த மக்கள்…!!

THAVAMANI NATARAJAN