Newskadai.com
தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர்..! நடந்தது என்ன..?

padma seshadri bala bhavan
Share this:

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி டிவிட்டரில் பதிவிட இந்த சம்பவம் மேலும் தீவிரமடைந்தது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள கே.கே. நகரில் செயல்படும் பத்ம சேஷாத்ரி பாலபவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் மீது பள்ளி மாணவி ஒருவர் எழுப்பிய பாலியல் புகாரை அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். அதாவது ஆன்லைன் வகுப்பில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், வாட்சப்பில் தனிப்பட்ட முறையில் தவறான நோக்கத்தில் பேசுவதுடன் வீடியோகால் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வகுப்புகளின் போது அரைகுறை ஆடைகளுடன் மாணவிகள் முன்பு தோன்றியதாகவும் மாணவிகள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.

மாணவிகளின் இந்த புகார் சமூக வலைதளங்களில் வைரலானதுடன் ஆளும் கட்சியான திமுகவின் மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி டிவிட்டரில் பதிவிட இந்த சம்பவம் மேலும் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய விசாரணை நடத்தினர். இதற்கிடையில், மே 23ம் தேதி சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணைஆணையர் ஜெயலட்சுமி குற்றம்சாட்டப்பட்ட பிஎஸ்பிபி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் ஆசிரியர் ராஜகோபாலனை ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரித்தனர். இந்த சர்ச்சைகளுக்கு இடையில் மே 24ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக பிஎஸ்பிபி பள்ளியின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மீதான குற்றம் குறித்து பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரா வெளியிட்ட விளக்கத்தில், ‘‘மாணவர்களின் நலனை உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக பாதிக்கிற எந்த ஒரு செயலையும் பள்ளி நிர்வாகம் சகித்துக் கொள்ளாது. சமூகஊடகங்களில் வெளியாகியிருப்பது போன்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் கடந்த காலத்தில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை நாங்களே தாமாக முன்வந்து நியாயமாக, வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்போம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார். அதில் உண்மைத் தன்மை இருக்கும் பட்சத்தில், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதனிடையே ராஜகோபாலன் மீது பாதிக்கப்பட்ட மாணவிகளும், பெற்றோரும் புகார் அளிக்க முன் வருமாறு சென்னை மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு புகார் அளிக்கும் மாணவிகள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணைஆணையர் ஜெயலட்சுமி-ஐ 9444772222 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

நெகட்டிவா? பாசிட்டிவா?… தனியார் மருத்துவமனையின் பித்தலாட்டத்தால் சிக்கித் தவிக்கும் குடும்பம்…!

NEWSKADAI

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

MANIMARAN M

5 ஜி காலத்தில் இப்படியொரு சிறுவன்… விவசாயத்தில் புகுந்து விளையாடும் 9 வயது பிரகதீஷ்…!!

MANIMARAN M

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

கல்லூரி இறுதி பருவத் தேர்வை தவிர அனைத்தும் ரத்து… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…!!

AMARA