Newskadai.com
சினிமா

ட்விட்டரில் கட்டிப்புரண்டு சண்டை… இரண்டு நடிகைகளுக்கிடையே மாட்டிக்கொண்ட பிரபல இயக்குநர்…!!

Share this:

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்த அதிகார பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளிவராத காரணம் பாலிவுட் நட்சத்திரங்களுக்கிடையில் உள்ள நெபோடிசம் தான் என்று பிரபலங்கள் பலரால் கூறப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த நடிகை கங்கனா ரனாவத் திரைத்துறையில் நெபோடிசம் இருப்பதாகவும் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திலும் அது வெளிப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். குறிப்பாக நடிகைகள் டாப்ஸி பன்னு, ஸ்வரா பாஸ்கர், மற்றும் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யாப் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

டாப்ஸி மற்றும் ஸ்வரா பாஸ்கர் ‘பி கிரேட் நடிகைகள்’ அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கங்கனா பேட்டியளித்தார். மேலும் நீங்கள் அலியா பட் மற்றும் அனன்யாவைவிட சிறப்பான தோற்றத்தில் இருந்தும் வாய்ப்பு கிடைப்பதில்லையே ஏன்..?. உங்கள் இருப்பே இங்கு நெபோடிசம் இருப்பதற்கான சான்று,” என்றும் குற்றஞ்சாட்டினார்.

டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் “மன கசப்போடு இருக்காதீர்கள், சந்தோஷமாக இருங்கள் என்றும், பள்ளியில் படிக்கும் போதுதான் கிரேட் முறை இருந்தது, இங்குமா கிரேட் முறையை பயன்படுத்துகிறோம்,” என கங்கனாவிற்கு பதிலடிக் கொடுத்துள்ளார்.

இயக்குனர் அனுராக் காஷ்யாபோ, கங்கனாவின் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, “கங்கனா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். என்னுடைய திரைபடங்களுக்கு வருவார். எனக்கு இந்த புதிய கங்கனாவை தெரியாது. அவர் மணிகர்ணிகா படங்களுக்கு பிறகுதான் இவ்வாறான பேட்டிகளை கொடுக்க தொடங்கிவிட்டார்,” என்றும் “வெற்றியின் போதை அனைவரையும் மயக்கும். ‘என்னை போல இருங்கள். என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்,’ என்கிறார் அவர். இது போன்ற வார்த்தைகளை 2015ஆம் ஆண்டுக்கு முன்பு நான் அவரிடமிருந்து கேட்டதில்லை,” என்றும், ஒரு சமயத்தில் கங்கனாவை கண்டு பிரமித்தவர்கள் கூட, இப்போது அவரிடமிருந்து விலக தொடங்கிவிட்டனர் எனவும் அனுராக் ட்வீட் செய்துள்ளார்.

அனுராக் காஷ்யப் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த கங்கனா, “நான் போலி மனிதர்களால் சூழப்பட்டுள்ளதாகவும், அவர்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் மினி மகேஷ் பட் கூறுகிறார். தீவிரவாதிகளைக் காக்கும் அர்பன் நக்சல்ஸ், தேச விரோதிகள் இப்போது சினிமா மாஃபியாக்களை காக்கிறார்கள்,” என்று அனுராகை மினி மகேஷ் பட் என குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாக பாலிவுட்டில் பிரபலங்கள் ஒருவருகொருவர் ட்விட்டர் போர் புரிந்து வருகின்றனர்.


Share this:

Related posts

பாகுபலி வில்லன் நடிகர் ராணா – மிஹீகா பஜாஜ் திருமணம் எளிமையாக நடந்து முடிந்த வீடியோ..

NEWSKADAI

அஜித்துக்கு மட்டும் ஓல்டு கெட்டப்பா?… “வக்கீல் சாப்” மோஷன் போஸ்டரை பார்த்து கொந்தளிக்கும் தல ஃபேன்ஸ்…!

AMARA

பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்குவாரா கமல்?…. போட்டியாளர்கள் பட்டியலைப் பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்…!!

AMARA

மறைந்த நடிகர் சுஷாந்திற்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான்…!!

NEWSKADAI

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய்… மகள் ஆராத்யாவும் நலம்…!!

NEWSKADAI